Sunday, February 10, 2019

அஸ்னா பள்ளி - சில அவதானங்கள்

அஸ்னா பள்ளி எனது ஊரான அக்குரணையின் மிக முக்கிய பள்ளி. அக்குரணை நகரப்பகுதியில் அமைந்திருப்பது புவியியல் ரீதியாக அப்பள்ளிக்கு தனித்துவமான அடையாளத்தை பெற்றுக்கொடுக்கிறது.
இலங்கையில் எனக்கு மிகவும் பிடித்த பள்ளிகள் இரண்டு. ஒன்று ஜாமியா பள்ளி. அடுத்தது அஸ்னா பள்ளி. ரமழான் காலத்தில் அஸ்னா என்னுள் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. இப்பள்ளி கொண்டிருக்கும் அமைதியான சூழல் இறைவனோடு உறவாடுவதற்கு எல்லா வகையிலும் துணைசெய்கிறது.
இப்பள்ளியை மென்மேலும் பலப்படுத்துவது பற்றிய சில கருத்துக்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்:

1- புராதன தன்மையை பேணுதல்
அழகுபடுத்தல் என்ற பெயரில் முழுப் பள்ளியையும் டைல்ஸ் பிடித்து அதன் புராதனத் தன்மையை இல்லாமல் செய்வதை அவதானிக்க முடிகிறது. புராதன சின்னங்கள் வரலாற்றை எமக்குணர்த்துகிறது. கஅபாவும் அதன் புராதனத் தன்மையுடன் பாதுகாப்பட்டிருந்தால் எவ்வளவு சிறப்பாகவிருக்கும் என்று கலாநிதி சுக்ரி அடிக்கடி கூறுவது இங்கு ஞாபகத்தில் வருகிறது. புராதனமே ஓர் அழகாக மாற்றமடைவது மிகவும் அவசியமானது.

2- பள்ளியும் இயக்கங்களும்
பள்ளி அல்லாஹ்வுக்கு சொந்தமானது. எவ்வியக்கமும் அதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. பணம் வசூலிக்கும் போது பொதுவாக அனைவரிடமும் வசூலித்துவிட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்கின்ற போது ஏதாவதொரு இயக்கத்துக்கு பக்கச்சார்பாக நடந்து கொள்வது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அனைத்து இயக்கங்கள், நிறுவனங்களையும் அரவணைக்கும் பள்ளியாக இது வடிவமைக்கப்பட வேண்டியுள்ளது.

3- பள்ளியும் பெண்களும்
அண்மைக்காலமாக பெண்கள் தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுகைகளில் நோன்பு காலங்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை அஸ்னா ஏற்படுத்தி தந்திருப்பது ஆரோக்கியமானது. சில பயான் நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். உண்மையில் இவை வரவேற்கத்தக்க மாற்றங்கள். பெண்கள் விடயத்தில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படவேண்டியிருக்கிறது. ஐவேளை தொழுகைகளிலும் கலந்து கொள்வதற்கான அனுமதி அளிக்கப்படுவதுடன் பொருத்தமான இடமொன்றையும் ஒதுக்கிக் கொடுத்தல்.
தாரிக் ரமழான் குறிப்பிடுவது போன்று அஸ்னா நிர்வாக சபையிலும் அவர்களுக்கு அங்கத்துவம் வழங்கவேண்டியுள்ளது. பெண்கள் சமூகத்தின் அரைவாசியினர். அவ்வரைவாசியை நிர்வகிக்க மிகவும் தகுதியானவர்கள் அவர்கள்தான்.

4-பள்ளியும் வாசிகசாலையும்
அஸ்னா பள்ளியின் அமைவிடம் வாசிகசாலையொன்று அமைக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமான இடம். பள்ளி ஆன்மீகம், அறிவு இரண்டையும் வளர்க்கும் இடம். பொருளாத ரீதியாக அதற்குதவக்கூடியவர்கள் பலர் இருக்கின்றனர்.

குத்பாவும் பள்ளியும்
இளைஞர்களும் பள்ளியும்
பள்ளியும் ஏனைய மதத்தவர்களுடனான உறவும்
ஓர் பள்ளியைப் பொறுத்தவரை இதுபோன்ற விடயங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. இவை நீண்ட கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

இலங்கையின் இளம் ஆளுமை ரஸ்னி ராஸிக்கின் அர்ப்பணிப்புகள் பற்றி ஒரு பார்வை..

2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர்தான் ரஸ்னி ராஸிக். குழந்தைகள் பராமரிப்பு உலக அமை...