Friday, February 8, 2019

முகம் குப்புற படுப்பவர்களா நீங்கள்?



உங்களுக்காகவே இப்பதிவு!
தூக்கத்தில் பல நிலைகளையும் அதன் பலன்களையும் நாம் பழைய
இப்பதிவில் பார்த்தோம்!
இந்த முகம் குப்புற படுப்பதினால் அல்லாஹ்வுடைய எடுத்துக்காட்டுகளை நாம் ஏன் சிந்திக்க மறந்தோம்!
அல்லாஹ் மனிதர்களின் முகம் குப்புற நிலையை பற்றி கூறும் திருமறை வசனங்களை பாருங்கள்...
முகம் குப்புற நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவோர் கெட்ட இடத்தில் தங்குவோராகவும், வழிகெட்டோராகவும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 25:34
அவர்களும், வழிகெட்டவர்களும், இப்லீஸின் படையினர் அனைவரும் அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள்.26
திருக்குர்ஆன் 26:95
தீமையைக் கொண்டு வந்தோர் முகம் குப்புற நரகில் தள்ளப்படுவார்கள். "நீங்கள் செய்ததைத் தவிர வேறு கூலி கொடுக்கப்படுவீர்களா?'' (என்று கூறப்படும்.)
திருக்குர்ஆன் 27:90
அவர்கள் நரகத்தில் முகம் குப்புறப் போடப்படும் நாளில் " நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்'' (எனக் கூறப்படும்).
திருக்குர்ஆன் 54:48
முகம் குப்புற விழுந்து கிடப்பவன் நேர்வழி பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவனா?
திருக்குர்ஆன் 67:22
இன்றே முகம் குப்புற படுக்கும் நிலையை மாற்றி கொள்வோம்...
இன் ஷா அல்லாஹ்!!!
சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...
படியுங்கள்... 
பகிருங்கள்...
திருக்குர்ஆனில் அறிவியல்...
மறுமை நாளை நோக்கி...


No comments:

Post a Comment

இலங்கையின் இளம் ஆளுமை ரஸ்னி ராஸிக்கின் அர்ப்பணிப்புகள் பற்றி ஒரு பார்வை..

2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர்தான் ரஸ்னி ராஸிக். குழந்தைகள் பராமரிப்பு உலக அமை...