Showing posts with label தமிழ் Post. Show all posts
Showing posts with label தமிழ் Post. Show all posts

Sunday, February 10, 2019

துருக்கித் தொப்பிப் போராட்டம்

13 வருடங்கள்
1905.12.31 - 2018.12.31
துருக்கித் தொப்பிப் போராட்டம்
============================

1905ம் ஆண்டு மே மாதம் 02ம் நாள் சட்டத்தரணி எம் சீ அப்துல் காதர் அவர்கள் துருக்கித் தொப்பி அணிந்து கொண்டு நீதியரசர் லாய்ட் முன்னிலையில் ஒரு வழக்கில் ஆஜரானார்.

அப்போது அவர் அவ்வாறு அந்த வழக்கில் வாதாடுவதை எதிர்த்த நீதியரசர் லாயட் நீதிமன்றுக்கு மரியாதை செலுத்தும் முகமாக அவர் அணிந்திருந்த துருக்கித் தொப்பியை அல்லது காலணியை கழற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார் .

அப்போது தொப்பி அணிந்து வாதாடுவது தான் நீதிமன்றுக்கு செய்யும் இஸ்லாமிய மரியாதை எனவும் அதனை கழற்ற முடியாது என மறுத்து சட்டத்தரணி அப்துல் காதர் அவர்கள் நீதி மன்றத்தை விட்டு வெளியேறினார்.

அவரது துணிகரமான இச்செயல் மூலம் தனது தொழிலை விடவும் சமூக உரிமை காப்பதின் கடமைப்பாட்டை உணர்த்தியதோடு விளிப்பற்றிருந்த சமூகத்தினை செயலாற்றவும் செய்தது.
இவ்விடயமனது அன்றைய சோனக சங்கத் தலைவரான ஐ எல் எம் அப்துல் அஸீஸ் அவர்களை எட்டியபோது அவர்கள் அன்றைய முஸ்லிம் முக்கிய தலைவர்களை அழைத்து மரபுரிமையின் முக்கியத்துவத்தினை உணர்த்தினார் .

இது இவ்வாறு இருக்கும்போது நீதியரசர் லாயட்டின் விடாப்பிடியான வலியுறுத்தலின் பெற்றாக 1905ம் ஆண்டு செப்டம்பர் 19ம் திகதி துருக்கித் தொப்பி அணிந்து வாதாடுவது தடுக்கப்பட்டதாக சட்டமாக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக 1905ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் அறிஞர் அஸீஸ் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் கூடி தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமையை சட்டமாக்குவதற்காக வேண்டிப் போராடும் விதமாக துருக்கித் தொப்பி போராட்டக் குழு என்ற பெயரில் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்.

அக்குழுவில் பின்வருவோர் இடம்பெற்றனர்

01.ஜனாப் எம் எல் எம் ஸைனுதீன் ஹாஜியார்
02.ஜனாப் முஹம்மது மாக்கான் மாக்கார்
03. ஜனாப் ஐ எல் எம் அப்துல் அஸீஸ்
04.ஜனாப் எஸ் எல் எம் மஹ்மூது ஹாஜியார் (சமாதான நீதிவான்)
05.ஜனாப் ஐ எல் எம் எச் நூர்தீன் ஹாஜியார்
06 ஜனாப் கரீம் ஜீ ஜபர் ஜீ
07.ஜனாப் எஸ் எஸ் நெய்னா மரிக்கார் ஹாஜியார்
08.ஜனாப் சீ எம் மீராலெப்பை மரிக்கார்
09.ஜனாப் ஏ எல் அப்துல் கரீம்
10.ஜனாப் ஓ எல் எம் மரிக்கார் ஆலிம் சாஹிப்
11.ஹாஜி பின் அஹமது
12. ஜனாப் எம் ஐ முகம்மது (சமாதான நீதிவான்)
13.ஜனாப் ஐ எல் எம் மீரா லெப்பை மார்க்கர்
14.ஜனாப் என் டீ எச் அப்துல் கபூர்
15.ஜனாப் பீ ரீ மீராலெப்பை மரிக்கார்
16.ஜனாப் என் ரீ எம் பக்கீர்
17.ஜனாப் முஹம்மது அப்துல் காதர் ஆலிம் சாஹிப்
18.ஜனாப் இப்ராகிம் சாஹிப்
19.ஜனாப் எம் கே எம் முஹம்மது ஸாலிஹ்
20.ஜனாப் எம் ஏ கச்சி முஹம்மது
21. ஜனாப் பீ பீ உம்பிச்சி

இப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமூகத்திற்கு உணர்த்துவதற்காக நாட்டின் முக்கிய பிரதேசங்களில் மாபெரும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.இதன் முதன்மைக் கூட்டம் கொழும்பு மருதனை பள்ளிவாயல் முற்றவெளியில் 1905ம் ஆண்டு டிசம்பர் மதம் 31ம் நாள் ஜனாப் கெளரவ டபிள்யு எம் அப்துல்ரஹ்மான் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் குழு உறுப்பினரான ஜனாப் கரீம் ஜீ ஜபர் ஜீ அவர்களின் ஆலோசனையின் பேரில் வாரவலைக்கப்பட்ட இந்தியாவின் புகழ் பெற்ற பரிஸ்ட்டரான மௌலவி ரபியுதீன் அஹமது சிறப்புரை நிகழ்த்தினார். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரம் ஒன்று திரண்டிருந்தனர் .

இப்போராட்டத்தில் சமகால முஸ்லிம்களின் பத்திரிக்கைகளான முஸ்லிம் நேசன், மித்திரன் முஸ்லிம் பாதுகாவலன், போன்றன சரியான பங்களிப்பை செய்தன என்பதும் இங்கு குறிப்பிட தக்க விடயம்.

சமூக ஒற்றுமையினாலும் முஸ்லிம் தலைமைகளின் துணிகரமான சமூகப்பற்றுள்ள முடிவுகளாலும் வெற்றி பெற்று முஸ்லிம் சட்டத்தரனிகள் நீதி மன்றத்தில் தொப்பி அணிந்து கொண்டு வழக்கில் வாதாட முடியும் என்ற சட்டம் ஆங்கிலேய அரசினால் சட்டமாக்கப்பட்ட இயற்றப்பட்டது.

நன்றி
Ranoos

அல் ஹாஜ் என் டீ எச் அப்துல் கபூர் அவர்களும் கபூரிய்யா அரபுக்கல்லூரியும்


"சிலர் மரணித்தவிடுவார்கள் ஆனால் அவர்கள் மனிதர்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்" ஆலிமுல் குறைஷ் இமாம் முஹம்மத் இத்ரீஸ் ஷாபி றஹிமஹூல்லாஹ் 

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பெடல்பியா நகரில் சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சி நடைபெறும் காலப் பகுதி 1925ம் ஆணடு அனைவரும் என் டீ எச் அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் பெருமதிவாய்ந்த மாணிக்கக் கல் அவரிடம் இருக்கிறதாம் என்று பேசிக்கொண்டார்கள். ஆமாம் விலைமதிப்பற்ற நீலநிற மாணிக்கல்லை Blue sapphire ஏலத்தில் விற்பனை செய்து தாய்நாட்டுக்கு பெரும் அண்ண்ணியச் செலாவணியுடன் திரும்புகிறார். இலங்கையின் அன்றைய ஆளுனர் Sir வில்லியம் ஹென்றி மன்னிங் அவர்கள் you have done a valuable work என்று பாராட்டினார். 

என் டீ எச் அப்துல் கபூர் இலங்கை வரலாற்றில் கல்வித்துறைக்கு மகத்தான சேவையை நிறைவேற்றியவராவர். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவை சொந்த செலவில் நிர்மாணித்தார். மேலதிகமாக பதினாறு வகுப்பறைகளை கட்டிக்கொடுத்தார். ஹாஹிரா கல்லூரியின் விடுதியை Hostel நிர்மாணிக்க அன்று ஒரு லட்சம் ரூபாவை வழங்கினார். ஸாஹிராக் கல்லூரிக்கு ஸதகதுல் ஜாரியாவாக தனது 14ஏக்கர் ரப்பர் தோட்டத்தை (Rubber estate) வக்ப் செய்தார். அவரது நினைவாகவே ஸாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபம் அமைககப்பட்டுள்ளது.

ரத்மலானையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் (கண் மற்றும் செவிப்புலன் அற்ற) பாடசாலையை தனது காணியில் சொந்தச் செலவில் நிர்மாணிதார். 

நாட்டில் புகழ்பூத்த ஆலிம்களை உருவாக்கிய மஹரகமை கபூரிய்யா அரபுக்கல்லூரியை நிர்மாணித்து தீன் பணி செய்தார். அல்குர்ஆனை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சின் தலைவர் சிராஜூல் மில்லத் அப்துல ஸமது ஸாஹிப் அவர்களின் தந்தை கண்ணியத்திற்குரிய அப்துல் ஹமீத் பாகவி ஹஸ்ரத் உட்பட பல அறிஞர்களை வரவழைத்து கபூரியாவை நெறிப்படுந்தினார்கள். கபூரியாவுக்கு என 40 ஏக்கர் விசாலமான ரப்பர் காணியை (Rubber estate) வக்ப் செய்தார்கள். 1971ம் ஆண்டு பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையாரின் காலத்தில் இந்தக் காணிகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு தற்சமயம் பத்து ஏக்கர் காணி மாத்திரமே கபூரியாவுக்குச் சொந்தமாகக் காணப்படுகிறது. 

1905ம் ஆண்டில் தொப்பி அணி அணிந்து நீதிமன்றத்தில் வாதிட முடியாது என்று உத்தரவை எதிர்த்து 1905ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி் அறிஞர ஏம் எம் ஏ அஸீஸ் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் கூடி தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமையை சட்டமாக்க போராடும் நோக்கில் "துருக்கித் தொப்பி போராட்டக் குழு" என்ற பெயரில் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்கள். இதில் என் டி எச் அப்துல் கபூர் அவர்கள் ஓர் உறுப்பினராக இருந்து போராடினார் . இறுதியில் நீதிமன்றத்தில் தொப்பியுடன் வாதட முடியும் என்று அனுமதி கிடைத்தது. 

என் டி எச் அவர்கள் அனைத்தையும் செய்துவிட்டு இது அல்லாஹ்வுக்காக செய்தது என்று திருப்தியடைந்துகொள்வார்கள். 

என் டீ எச் அப்துல் கபூர் அவர்கள் பற்றி இலங்கையின் முன்னாள் பிரதமர் 
S W R D பண்டாரநாயக்க கூறிய வார்த்தைகள் இவை.

Though he is perhaps best remembered for the contribution to the cause of Muslim education and religion, his generosity was not limited to the Muslim community alone. I regard him as one of the outstanding Ceylonese gentlemen of his age and appreciate this opportunity of paying this tribute to him". - S.W.R.D. Bandaranaike

ஆக்கம் 
பஸ்ஹான் நவாஸ்
செய்தி ஆசிரியர் 
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

மகத்துவம் நிறைந்த வெள்ளைப்பூண்டு!

பூண்டு, வெள்ளைப்பூண்டு, பூடு, உள்ளி என அழைக்கப்படும் பூண்டு பருவகால தாவரமாகும். பழங்காலத்திலிருந்தே சமையலில் இடம்பெற்று வரும் பூண்டுக்கு மருத்துவக்குணம் அதிகம். 

* பூண்டு ஒரு கிருமிநாசினி. பூண்டை அரைத்து அதே அளவு தண்ணீர் கலந்து பருகினால் காலரா நம்மை நெருங்காது.

* வயிற்று உப்புசம் போக்கக்கூடிய பூண்டு பக்கவாதம், உடல் விரைப்பு, இதயநோய், வயிற்றுவலி போன்றவற்றுக்கு கைகண்ட மருந்தாகும்.

* நுரையீரலில் கட்டியிருக்கும் மார்புச்சளியை கரைக்கக்கூடியது.

* வாய்வுக்கோளாறினால் சிலருக்கு முதுகுப்பிடிப்பு, இடுப்புப்பிடிப்பு, கை-கால் வீக்கம் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படக்கூடும். அப்போது, வெள்ளைப்பூண்டை தீயில் சுட்டு அதன் தோலை உரித்து பூண்டை மட்டும் சாப்பிடுவதால் மேலே சொன்ன கோளாறுகள் எல்லாம் சரியாகும்.
#doctorvikatan #விகடன்

காடை முட்டை மருத்துவம்.....!!

.தகவல்:= டாக்டர் பர்ஹானா பதுர்தீன்

புற்று நோய், அல்சர், இரத்த சோகை, காசநோய்,ஆஸ்த்மா, சுவாச நோய், ஞாபக சக்தி, அலர்ஜி, உட்பட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் "காடை முட்டை"

புற்றுநோயின் வளர்ச்சிதைத் தடுக்கும் காடை முட்டை.

காடை முட்டை சுவைத்திருக்கிறீர்களா என்று கேட்டாலே, பலருக்கும் முகம் பல கோணங்களில் செல்லும்.

காடை முட்டையெல்லாம் சாப்பிடுவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் உண்மையில் காடை முட்டையில் கோழி முட்டை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

காடை முட்டை மிகவும் சிறியதாக, மேலே சற்று கருமையான புள்ளிகளுடன் காணப்படும். கிராம பகுதிகளில் காடை முட்டையை பச்சையாக குடிப்பார்கள்.

காடை முட்டையை குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். மேலும் காடை முட்டை போன்றே அதன் இறைச்சியிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.

சிக்கன், மட்டனுக்கு பின், பல பெரிய ஹோட்டல்களில் காடை இறைச்சி தான் அதிகம் விற்பனையாகிறது.

சரி, இப்போது காடை முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

காடை முட்டை

காடை முட்டையில் வைட்டமின்களும், இதர சத்துக்களும், கோழி முட்டையை விட அதிகம் உள்ளது. அதுவும் கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது. கோழி முட்டையில் 50% வைட்டமின் பி1 என்றால், காடையில் 140% உள்ளது என்றால் பாருங்கள்.

அலர்ஜியை எதிர்க்கும்

அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், ஒவ்வாமை பிரச்சனை அல்லது அலர்ஜி தடுக்கப்படும். ஏனெனில் இதில் ஓவோமுகாய்டு புரோட்டீன் உள்ளது. இது அலர்ஜியை எதிர்த்துப் போராடும்.

ஞாபக சக்தி

காடை முட்டையை உட்கொண்டு வந்தால், அது மூளையின் செயல்பாட்டினை தூண்டி, ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் சீராக வைத்துக் கொள்ளும்.

புற்று நோய்

காடை முட்டையில் பல்வேறு புற்றுநோயின் வளர்ச்சிதைத் தடுக்கும் கார்சினோஜெனிக் பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வர, புற்றுநோயைத் தடுக்கலாம்.

வயிற்று அல்சர்

அல்சர் உள்ளவர்கள், காடை முட்டையை உட்கொண்டு வந்தால், செரிமான பாதையில் உள்ள காயங்கள் மற்றும் புண்களை ஆற்றிவிடும்.

இரத்த சோகை

உங்கள் உடலில் இரத்தத்தில் அளவு குறைவாக இருப்பின், காடை முட்டை சாப்பிட்டு வாருங்கள். இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். குறிப்பாக கர்ப்பிணிகள் இதை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கலாம்.
உடல் சுத்தமாகும்

காடை முட்டை உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கனிமங்களை நீங்கிவிடும். குறிப்பாக பித்தக்கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை இதை கரைத்து வெளியேற்றிவிடும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தினமும் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

இதர நோய்கள்

காச நோய், மூச்சுக்குழாய் ஆஸ்துமா, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள், அன்றாட உணவில் காடை முட்டையை சேர்த்து வருவது நல்லது.

குழந்தைகளுக்கு நல்லது.

வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 காடை முட்டையைக் கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, அவர்களது உடல் வலிமையுடனும், நோய்கள் எளிதில் தாக்காமல் ஆரோக்கியமாகவும் இருக்கும்...

அல்ஹம்துலில்லாஹ்

அஸ்னா பள்ளி - சில அவதானங்கள்

அஸ்னா பள்ளி எனது ஊரான அக்குரணையின் மிக முக்கிய பள்ளி. அக்குரணை நகரப்பகுதியில் அமைந்திருப்பது புவியியல் ரீதியாக அப்பள்ளிக்கு தனித்துவமான அடையாளத்தை பெற்றுக்கொடுக்கிறது.
இலங்கையில் எனக்கு மிகவும் பிடித்த பள்ளிகள் இரண்டு. ஒன்று ஜாமியா பள்ளி. அடுத்தது அஸ்னா பள்ளி. ரமழான் காலத்தில் அஸ்னா என்னுள் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. இப்பள்ளி கொண்டிருக்கும் அமைதியான சூழல் இறைவனோடு உறவாடுவதற்கு எல்லா வகையிலும் துணைசெய்கிறது.
இப்பள்ளியை மென்மேலும் பலப்படுத்துவது பற்றிய சில கருத்துக்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்:

1- புராதன தன்மையை பேணுதல்
அழகுபடுத்தல் என்ற பெயரில் முழுப் பள்ளியையும் டைல்ஸ் பிடித்து அதன் புராதனத் தன்மையை இல்லாமல் செய்வதை அவதானிக்க முடிகிறது. புராதன சின்னங்கள் வரலாற்றை எமக்குணர்த்துகிறது. கஅபாவும் அதன் புராதனத் தன்மையுடன் பாதுகாப்பட்டிருந்தால் எவ்வளவு சிறப்பாகவிருக்கும் என்று கலாநிதி சுக்ரி அடிக்கடி கூறுவது இங்கு ஞாபகத்தில் வருகிறது. புராதனமே ஓர் அழகாக மாற்றமடைவது மிகவும் அவசியமானது.

2- பள்ளியும் இயக்கங்களும்
பள்ளி அல்லாஹ்வுக்கு சொந்தமானது. எவ்வியக்கமும் அதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. பணம் வசூலிக்கும் போது பொதுவாக அனைவரிடமும் வசூலித்துவிட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்கின்ற போது ஏதாவதொரு இயக்கத்துக்கு பக்கச்சார்பாக நடந்து கொள்வது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அனைத்து இயக்கங்கள், நிறுவனங்களையும் அரவணைக்கும் பள்ளியாக இது வடிவமைக்கப்பட வேண்டியுள்ளது.

3- பள்ளியும் பெண்களும்
அண்மைக்காலமாக பெண்கள் தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுகைகளில் நோன்பு காலங்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை அஸ்னா ஏற்படுத்தி தந்திருப்பது ஆரோக்கியமானது. சில பயான் நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். உண்மையில் இவை வரவேற்கத்தக்க மாற்றங்கள். பெண்கள் விடயத்தில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படவேண்டியிருக்கிறது. ஐவேளை தொழுகைகளிலும் கலந்து கொள்வதற்கான அனுமதி அளிக்கப்படுவதுடன் பொருத்தமான இடமொன்றையும் ஒதுக்கிக் கொடுத்தல்.
தாரிக் ரமழான் குறிப்பிடுவது போன்று அஸ்னா நிர்வாக சபையிலும் அவர்களுக்கு அங்கத்துவம் வழங்கவேண்டியுள்ளது. பெண்கள் சமூகத்தின் அரைவாசியினர். அவ்வரைவாசியை நிர்வகிக்க மிகவும் தகுதியானவர்கள் அவர்கள்தான்.

4-பள்ளியும் வாசிகசாலையும்
அஸ்னா பள்ளியின் அமைவிடம் வாசிகசாலையொன்று அமைக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமான இடம். பள்ளி ஆன்மீகம், அறிவு இரண்டையும் வளர்க்கும் இடம். பொருளாத ரீதியாக அதற்குதவக்கூடியவர்கள் பலர் இருக்கின்றனர்.

குத்பாவும் பள்ளியும்
இளைஞர்களும் பள்ளியும்
பள்ளியும் ஏனைய மதத்தவர்களுடனான உறவும்
ஓர் பள்ளியைப் பொறுத்தவரை இதுபோன்ற விடயங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. இவை நீண்ட கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

Saturday, February 9, 2019

பிரசவ_வலியை_குறைக்க_திருக்குர்ஆன்_கூறிய_வழிமுறை

ஒரு மனிதன் சாதாரணமாக தன் வாழ்வில் 45 டெல் வலியை உணர்கிறான். ஆனால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் சாதாரணமாக 57 டெல் மேல் வரை வலியை உணர்கிறாள் என்கிறது அறிவியல். பிரசவத்தின் போது தாங்கமுடியாத வலியை ஒரு தாய் அனுபவிக்கிறாள்.

அந்த வலியை குறைவாக உணர்வதற்காக நவீன விஞ்ஞானம் நீருக்குள் பிரசவம் செய்வதை பரிந்துரை செய்துள்ளது. கிட்டத்தட்ட 70 நாடுகளில் இவை இன்றும் நடைமுறையில் உள்ளது. மேலை நாடுகளில் மகப்பேறு மருத்துவமனைகளில் பிரசவ அறையில் பெரிய தண்ணீர் தொட்டி அமைத்து அதில் நிறைமாத கர்ப்பிணியை பிரசவ நேரத்தில் அந்த தண்ணீர்தொட்டியில் அமர வைத்து விடுகின்றனர். குழந்தை கருப்பையில் நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. தாயும் சிரமமின்றி பிரசவிக்கிறாள்.

தண்ணீர்த் தொட்டியில் பிரசவம்! -http://www.vikatan.com/avalvikatan/2016-may-03/inspiring-stories/118298-normal-delivery-water-birth.html

Proof Wikipedia : Http://ta.m.Wikipedia.org/wiki/நீரில்_பிரசவம்

வீடியோவாக பார்க்க:YouTube சென்று Water birth videos என்றோ Baby under water, Natural water Birth என்றோ தேடி பார்க்கவும்.

இந்த நீருக்குள் பிரசவம் செய்வதை இன்று அறிவியல் விஞ்ஞானம் நடைமுறைப் படுத்தியதை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நடத்தி காட்டியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

மர்யம் (அலை) என்ற பெண்மணி பிரசவ வலி வந்தது பற்றியும், அப்பிரசவ வலியை குறைக்க இறைவன் ஒரு நீர் ஊற்றை உருவாக்கி வலியை குறைத்தாகவும் கீழ் காணும் உலக மக்களின் நேர்வழிக்காட்டியான திருக்குர்ஆன் கூறுகிறது.

திருக்குர்ஆன் வசனம்:

பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. "நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். "கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.

திருக்குர்ஆன்-19: 23, 24

மர்யம் (அலை) வலியை உணர்ந்த போது ஜிப்ரில் (நீர்) ஊற்றை இறைவன் ஏற்படுத்தியுள்ளதாகவும் கவலை வேண்டாம் எனவும் அறிவுரை கூறுகிறார்.

நீருக்குள் பிரசவம் 19:23,24 வசனத்தில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப்போது இதைக் கண்டு பிடித்துள்ளது. இந்த நடைமுறை சாத்தியம் என விஞ்ஞானம் நிருபித்துள்ளது.

சுதந்திர_போராட்டத்தில் ,முஸ்லிம்களின்_வகிபாகம்











சுதந்திர_போராட்டத்தில்
முஸ்லிம்களின்_வகிபாகம்

இலங்கையின் 71 வது சுதந்திர தினம் நாளை....  

இந்நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம் தேசிய வீரர்கள்.
இந்நாட்டிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புகளில் மிகமுக்கியமானதொரு பங்களிப்பே தேசிய போராட்ட களத்தில் நின்று உடல் பொருள் ஆவி துறந்தமை. அவ்வகையில் இன்றுவாழும் தலைமுறை சுதந்திரக் காற்றை அனுபவிக்க எம்முன்னோர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
இருந்தபோதும் குறித்த காலங்களில் மட்டும் நினைவூட்டப்படும் இவர்கள் மூலமாகவே இந்நாட்டின் முஸ்லிம்களின் வகிபாகம் குறித்து பேசப்படுகின்றது. ஆனாலும் அண்மைய காலத்து நடத்தை கோலங்களை சற்று நிதானித்து அவதானிக்கையில் பெரும்பான்மை சமூகத்தின் இந்நாட்டிற்கான தேசிய போராட்டத்தின் பங்களிப்பு அன்றுதொடக்கம் இன்றுவரை உயர்ந்த தரத்தில் இருந்துவருகின்றமை குறித்து இன்றுள்ள முஸ்லிம் சமூகம் மீள்பரிசீலனை செய்யவேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.
ஆகக்குறைந்தது இன்றுள்ள முப்படைகளில் முஸ்லிம்கள் அங்கத்துவம் சதவீதம் அடிப்படையில் இன்றுள்ளதை விட அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை நாடுப்பூராகவும் வியாபித்துள்ளது.
-------------------------------
04.02.1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆட்சி செய்தவர்கள்.
✍போர்த்துக்கேயர்: 156 வருடங்கள்.
✍ஒல்லாந்தர்: 138 வருடங்கள்.
✍ஆங்கிலேயர்: 152 வருடங்கள்.
📝அன்னியர் ஆட்சியில் இருந்து இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய,குரல் கொடுத்த,சகல இனத்தையும் சேர்ந்தவர்கள் தேச பிதாக்கள்,சுதந்திர போராட்ட வீரர்கள், தேச பக்தர்கள் என அழைக்கின்றோம்.
📝இலங்கையின் சுதந்திர த்திற்காக முஸ்லிம்களும் போராடினார்கள்,குரல் கொடுத்தார்கள்,ஆதரவு வழங்கினார்கள்.என்பதற்கான ஆதாரங்கள் இலங்கையின் வரலாற்று ப் பதிவுகளில் உள்ளன.
சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகளுக்குள் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த முஸ்லிம் தேசிய வீரர்களின் பெயர்கள் இலங்கையின் வரலாற்று ப் பதிவுகளில் இருந்து படிப்படியாக மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.
✍ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த முஸ்லிம் தேச பக்தர்கள்
**********************************
1804.06.04 ம் திகதி அன்று
👑 சேகு டீ டீ(தோப்பூர்),
👑 பீர் முகம்மது லெப்பை (மார்க்க கடமை புரிபவர்)
👑 முகம்மது சலாம் பதி உடையார் (குச்சவெளி)
👑 அபூபக்கர் ஈஸா (முகாந்தி ரம் சம்மாந்துறை)
👑 மீரா_குசைன் காரியப்பர் (சம்மாந்துறை)
👑 உசன் லெப்பை உதுமாலெப்பை (சம்மாந்துறை)
👑 அனீஸ் லெப்பை -டச்சு அரசின் முன்னாள் உத்தியோகத்தர். (மருதமுனை)
இவர்கள் சமூகத் தலைவர்களாகவும்,சமயத் தலைவர்களாகவும், அரச உத்தியோகத்தர்களாகவும் கடமை புரிந்துள்ளனர்.
👉📚இலங்கை சட்டக்கோவை பாகம் 1, பக்கம் 77,78.(1786-1833),
👉�இலங்கையின் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த தேசிய வீரர்கள்.
**********************************
✍சட்ட வல்லுனர்:முகம்மது காசிம் சித்தி லெப்பை(M.C.Sithy Lebbai)
சட்ட வல்லுனர்:I.L.M.Abdul Azeez,
👉�1924 ல் நடை பெற்ற சட்ட சபை தேர்தலில் "முகம்மதிய்யா தேர்தல் தொகுதியில்" வெற்றியீட்டிய சட்டசபை உறுப்பினர்களான:
பரிஸ்டர்:சேர்:மாக்கான் மாக்கார்(இலங்கையில் முதலாவது Sir பட்டம் பெற்ற முஸ்லிம்)
N.H.M.அப்துல்காதர்,
கலாநிதி: துவான் புர்கானுதீன் ஜாயா(T.B.Jaya),
📝1939.03.05 ம் திகதி முஸ்லிம் அரசியல் மாநாட்டில்
#கலாநிதி: பதியுத்தீன் மஹ்மூத் சுதந்திரத்திற்கு ஆதரவளித்து பேசினார்.
👉�1945.11.09 ல் டொமினியன் அந்தஸ்து வழங்கும் சட்டமூலத்திற்கான வாக்களிப்பில்
சேர்:ராசீக் பரீட்
டொக்டர்:M.C.M.கலீல்
T.B.Jaya போன்றவர்கள் தனது ஆதரவை வழங்கி வாக்களித்தனர்.
✍😥 இப்போது, இவர்களில் பலர் மறக்கடிக்கப்பட்டு
சட்டத்தரணி M.C.சித்தி லெப்பை,
கலாநிதி T.B.Jaya ஆகிய இருவரின் பெயர்கள் மாத்திரம் நினைவு கூரப்பட்டு வருகின்றன.
✍முஸ்லிம் விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை, இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தினர் வரலாற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லாமை காரணமாக அவர்களின் பெயர்களை தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
👉�இது சுதந்திரத்திற்காக உயிர்நீத்த,போராடிய முஸ்லிம் தலைவர்களுக்கு நாம் செய்து வரும் வரலாற்றுத் துரோகமாகும்
✍தேசிய தினம் இலங்கை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒன்றாகும்.இதில் முஸ்லிம்களுக்கும் பாரிய பங்குண்டு.
✍முஸ்லிம்களின் தேசிய வீர்ர்களை முஸ்லிம்கள்தான் நினைவு கூர வேண்டும்.இது எங்களின் கட்டாயக் கடமையாகும்.
😪😥😢 வரலாற்றை மறந்து வாழும் சமூகம் இன்னொரு சமூகத்தினால் கட்டியாளப்படும் என்பது வரலாற்றில் எழுதப்பட்ட உண்மையாகும்.

*குழந்தைகளுக்கு தாயத்து கட்டலாமா❓

குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போகும் போது பெற்றோர்கள் அவர்களை தர்ஹாக்களுக்கு அழைத்துச் சென்று தாயத்து என்றக் கருப்புக் கயிறை வாங்கி குழந்தைகளின் மேல் மாட்டிவிடுகிறார்கள். அல்லாஹ்வின் மீது வைக்கவேண்டிய நம்பிக்கையை அற்பக் கயிற்றின் மீதும் இறந்தவர்கள் மீதும் வைத்துவிடுகிறார்கள். இவ்வாறு செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது.

கயிறுக்கோ இரும்பு வளையத்திற்கோ நோயை அகற்றும் சக்தி இருக்கிறது என்று ஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவனாகிவிடுகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் (பத்து பேரைக் கொண்ட) சிறிய குழு ஒன்று வந்தது. ஒன்பது பேர்களிடத்தில் உறுதிப்பிரமானம் வாங்கினார்கள். ஒருவரிடத்தில் மாத்திரம் (பைஅத்) செய்யவில்லை. அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒன்பது நபர்களிடத்தில் (பைஅத்) உறுதிப்பிரமானம் வாங்கினீர்கள். இவரை விட்டுவிட்டீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவர் மீது தாயத்து உள்ளது என்று கூறினார்கள். உடனே (தாயத்து அணிந்திருந்தவர்) தன் கையை (ஆடைக்குள்) விட்டு தாயத்தை அகற்றினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் பைஅத் செய்துவிட்டு எவன் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் இணைவைத்துவிட்டான் என்று கூறினார்கள்.
அறி : உக்பா பின் ஆமிர் (ரலி),*
நூல் : அஹ்மத் 16781

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி,”எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப் படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்” என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

அறி : அபூ பஷீர் (ரலி),

நூல் : புகாரி (3005)


தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு

முஹம்மத் பகீஹுத்தீன்
பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. தேசப் பற்று என்பது மனிதனுக்குள்ளே புதைந்துள்ள ஒரு மானிடப் பண்பு. நபிகளார் (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த மக்கத்து மண்ணை மிகவும் நேசித்தார்கள். இறை தூதின் பணிகளை முன்னெடுக்கும் அடிப்படைத் தளமாக மக்கா பூமி அமைய வேண்டும் என்ற ஆசை நபிகளாரின் மனதில் வேரூன்றியிருந்தது. ஆனால் மக்காவாசிகளின் எல்லைமீறிய கொடுமைகள்; நபிகளாரை நிர்ப்பந்தமாக இடம் பெயரவைத்தது. அப்போது அவர்களின் உள்ளத்தில் இருந்து வெளிப்பட்ட சோகம் கலந்த வார்த்தைகள் மக்கா மண்ணின் மீதுள்ள அவர்களது நேசத்திற்கு சான்றாக அமைந்தன.
ஸீராவின் நிழலில் நபிகளாரின் தேசப்பற்று
நபியவர்கள் (ஸல்) ஹிஜ்ரத் பயணத்தின் போது மக்கா நகரை நோக்கி 'மக்காவே நீ உலகிலேயே எனக்கு மிகவும் விருப்பமான பூமி. அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமான தேசம். உன் சமூகம் என்னை விரட்டியிருக்காவிட்டால் நான் உன்னை விட்டுச் சென்றிருக்க மாட்டேன்' (முஸ்னத் அபூயஃலா) உண்மையில் இந்த வார்த்தைகளின் இடுக்குகளில் சோகத்தில் தள்ளாடும் கண்ணீர் திவலைகளை உணரமுடிகின்றது.
நபியவர்களுக்கு ஆரம்ப வஹி வந்த சமயத்தில் அந்நிகழ்வு குறித்த விளக்கத்தை பெறுவதற்காக கதீஜா (ரழி) அவர்கள் நபிகளாரை வரகத் பின் நௌபலிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது நபிகளார் மக்காவை விட்டும் விரட்டப்படுவார்கள் என வரகத் பின் நௌபல் எதிர்வு கூறியபோது இறைதூதர் (ஸல்) அவர்களுக்கு அதனை நம்ப முடியவில்லை. மிகுந்த ஆச்சரியத்தில் நான் பிறந்து வளர்ந்து ஒன்றாகக் கூடிப் பழகி வாழ்ந்த இந்த மண்ணிலிருந்து 'அவர்கள் என்னை வெளியேற்றுவார்களா? என்று கேட்டார்கள். இது நபியவர்கள் தேசத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக வெளிப்பட்ட வார்த்தையாகும். உண்மையில் நபிகளாரின் 'ஹுப்புல் வதன்' உணர்வால் வெளிப்பட்ட அந்த வார்த்தை எமது இதயத்தில் இரத்தம் கொட்டச் செய்கிறது.
நபியவர்களும் மனித உணர்வுகளோடு படைக்கப்பட்டவர்கள் என்ற வகையில், அவரிடமிருந்தும் தேசப்பற்றும், தேசிய உணர்வும் தேசத்தை நேசிக்கும் வார்த்தைகளும் இயல்பாகவே வெளிப்பட்டிருக்கின்றன.
நபியவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்னர் கூட தனது பிறந்த தேசத்தை நினைத்து கவலைப் பட்டிருக்கிறார்கள். மதீனா நகரில் தொற்றுநோய் பரவியிருந்த ஒரு சமயம் 'எங்கள் சொந்த மண்ணிலிருந்து தொற்று நோய்களுள்ள பூமிக்கு அந்த மக்காவாசிகள் எம்மை வெளியேற்றி விட்டார்களே' என மனம் நொந்து கடிந்து கொண்டார்கள். தொடர்ந்து பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்: 'யா அல்லாஹ் நீ எங்களுக்கு மக்காவை நேசத்திற்குரிய பூமியாக மாற்றியது போன்று, மதீனாவையும் மாற்றித் தருவாயாக அல்லது மக்காவை விட நேசத்திற்குரிய பூமியாக மதீனாவை மாற்றித் தருவாயாக' (புகாரி)
இறைதூதரின் தேசிய உணர்வு, தேசப்பற்று காரணமாக மக்காவை பிரிந்து சென்றமை அவர்களது உள்ளத்தில் கவலை கொடுத்தது. வேதனைமிக்க அந்த சோக சமயத்தில் எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவும் பங்கெடுத்து அவர்களை ஆற்றுப்படுத்தி தேற்றியுள்ளான். 'நபியே உங்கள் விருப்பத்திற்குரிய மண்ணிலிருந்து உங்களை வெளியேற்றிய ஊரைவிட அதிக வலிமையும் சக்தியும் கொண்ட இன்னும் எத்தனையோ ஊர்கள் இருந்துள்ளன. நாங்கள் அவற்றை அழித்து விட்டோம். பிறகு அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இருக்கவில்லை' (ஸுரா முஹம்மத் : 13)
நபியவர்கள் மதீனாவை விட்டு வெளியே சென்று திரும்பி வரும்போது மதீனா நகர் மீதுள்ள பற்றின் காராணமாக தமது வாகணத்தை விரைவு படுத்துவார்கள் என்ற செய்தி ஸஹீஹுல் புகாரியில் பதிவாகியுள்ளது.
நபியவர்கள் ஹிஜ்ரத் சென்று சில நாட்களுக்குப் பின்பு உஸைல் அல்-கிப்பாரி (றழி) அவர்கள்; மதீனாவுக்கு வந்த சமயம் உஸைல் (ரழி) அவர்களை விழித்து மக்கா நகரம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். உஸைல் கிப்பாரி (றழி) அவர்கள்; புனித மக்காவின் பசுமைகளையும் மழை பொழிந்து வெள்ளம் பாய்ந்தோடிய பள்ளத்தாக்குகளையும் செழிப்பாக வளர்ந்துள்ள மக்கத்து செடிகொடிகளையும் வர்ணிக்க ஆரம்பித்த போது நபி (ஸல்) அவர்கள்: போதும் போதும், மீண்டும் அந்த மக்கா பற்றிக் கூறி எமது உள்ளங்களை கவலையில் ஆழ்த்திட வேண்டாம் என்றார்கள்.(நூள்கள்:உஸுதுல் காபா, அல்-இஸாபா)
ஸஹாபாக்கள் வாழ்வில் தேசப் பற்று
பிலால் (றழி) அவர்கள் மதீனாவில் சுகயீனமுற்றிருந்த ஒரு சமயம் மக்காவை நினைத்து கண்ணீர் வடிக்கிறாகள். 'இத்கிர் மற்றும் ஜலீல் என்ற பசுமையான புற்றரைகள் என்னைச் சூழ இருக்க மக்காவின் அந்தப் பள்ளத்தாக்கில் ஓர் இரவேனும் தூங்கும் நாள் எனக்குக் வரக் கூடாதா?; மஜன்னாவின் (மக்காவின்; ஒரு இடம்) நீரைப் பருகும் வாய்ப்பு ஒரு நாளேனும் கிட்டாதா? ஷாமா, துபைல் என்ற இரு மலைகளும் எனக்குத் தென்படக் கூடாதா? என பிலால் தனது தேச உணர்வின் மன உலைச்சலை கவியாக பாடியுள்ளார்கள். (நூல் புகாரி)
ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் வழங்கிய பங்கீடுகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் தான் பிறந்த மண்ணை மனத்திருப்தியோடு ஏற்பதை போன்று வேறு ஒன்றிலும் மனிதன் திருப்தி காண்பதில்லை என அப்துல்லா இப்னு துபைர் ரழி அவர்கள் கூறியுள்ளார்கள்.
தேசப்பற்றும் தேசிய உணர்வும் இருப்பதால் தான் நாடுகள் வளமாகின்றன' என உமர் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இஸ்லாமிய நோக்கில் தேசம் பெறும் அந்தஸ்து
சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தமது அடையாளத்தையும், மார்க்கத்தையும் அடையாளப்படுத்துவதிலும் நாட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதிலும் தான் கவனம் செலுத்துகின்றனர். மாற்றமாக, நாட்டின் தேசிய நலனில் அக்கறை காட்டுவது குறைவு என்ற மனப்பாங்கே பெரும்பான்மை சமூகத்திடம் பொதுவாகக் காண முடிகிறது. இலங்கை தேசம் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே ஒரு முஸ்லிம் தனது தேசத்தை சார்ந்து நிற்றல் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டினை மிகத் தெளிவாக புரிந்து கொள்வது பல்லின சமூகத்தில் இணங்கி வாழ்வதற்கான அடிப்படைத் தேவையாகும்.
இஸ்லாமிய சட்டவியல் பரப்பில் தேசம் பெறும் முக்கியத்துவம் என்ன? ஒரு முஸ்லீமால் தேசத்திற்காக தனது வாழ்வை தியாகம் செய்ய முடியுமா? அல்லது தேசத்தை மையப்படுத்தி ஒரு ஜமாஅத் அல்லது ஒரு நிறுவனம் தனது பணிகளை முடுக்கிவிடுவது குறித்து இஸ்லாமிய நிலைப்பாடு என்ன? அது அனுமதிக்கப்பட்டால் அதன் வரையறைகள் யாவை? போன்றன முஸ்லீம் சமூகத்திற்கு மத்தியில் பரவலாக பேசப்படும் கேள்விகள். இது குறித்த ஒரு தெளிவை பின்வரும் அறிஞர்களின் விளக்கங்களினூடாக பெற முடியும் என நம்புகின்றோம்.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் தேசம் பெறும் வகிபாகத்தை பற்றி அல்லாமா யூசுப் அல்-கர்ளாவி அவர்கள் குறிப்பிடும் போது 'இஸ்லாம் இயற்கை மார்க்கம் என்ற அடிப்படையில் தேசத்தை சார்ந்து நிற்கும் உணர்வை அது அங்கீகரிக்கின்றது' என்கிறார். மேலும் 'இஸ்லாம் எப்போதும் மனித இயல்புகளை மதிக்கிறது. இந்த வகையில் ஒரு மனிதனின் தேசிய உணர்வையும் தேசத்தை சார்ந்து நிற்கும் மனோநிலையையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது' என்றும்; 'தேசப் பற்று என்பது மனித இயல்பூக்கத்தை சார்ந்தது. இதில் காபிர்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபாடுகளின்றி அனைவரும் உடன்படுகின்றனர்' என்றும் கலாநிதி கர்ளாவி அவர்கள் அல்வதன் வல்முவாதன் என்ற நூலில் விளக்குகிறார்.
நபியவர்களுடைய ஸீராவில் தேசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பல்வேறு உதாரணங்களை நாம் மேலே கண்டோம். குறிப்பாக நபியவர்கள் சிறுபான்மை சமூகமாக மக்காவில் வாழும் போது மக்காவை அதிகம் நேசித்திருக்கின்றார்கள் என்பதை அந்த ஹதீஸ்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
அல்குர்ஆனின் பார்வையில் தேசம்
தேசத்தின் மீதான நேசமும் தன் உயிர் மீதான பற்றும் மனித இயல்பைச் சார்ந்து என்ற ரீதியில், ஒரு மனிதனை தனது தேசத்திலிருந்து வெளியேற்றி விடுவதானது மிகப் பெரும் பாவமாக இஸ்லாம் கருதுதிறது. ஒரு மனிதனை கொலை செய்வதற்கு சமனான குற்றமாக ஒரு மனிதனை தனது தேசத்திலிருந்து வெளியேற்றி விடுவதனை அல்குர்ஆன் நோக்குகிறது. ஒரு சமூகம் அநியாயமாக அதன் தேசத்திலிருந்த வெளியேற்றப்படும் போதுதான் சமூகங்கள் மத்தியில் யுத்தம் விதியாகிறது. எனவேதான் இஸ்லாம் தேசத்தை விட்டு வெளியேற்றுவதை பல குற்றங்களுக்கான தண்டனையாகவும் விதித்துள்ளது.
ஸூரா அந்நிஸாவின் 66 வது வசனத்தில் அல்லாஹ் தஆலா 'நீங்கள் உங்களை கொலை செய்து கொள்ளுங்கள் அல்லது உங்களது பூமியிலிருந்து வெளியேறிச் சென்று விடுங்கள் என அவர்களுக்கு விதித்த போது, அவர்களில் மிகச் சிலரே அதனை செய்யக் கூடியவர்களாக இருந்தனர்' என்கிறான்.
அதாவது பனூ இஸ்ரவேலர்கள் நபி மூஸா (அலை) அவர்களுக்கு கட்டுப்படாமல் நடந்து கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்கு தவ்பாவாக இரு அம்சங்களை பரிந்துரை செய்தான். அதிலொன்று, அவர்கள் தங்களைத் தாங்களே கொலை செய்து கொள்ள வேண்டும். மற்றையது நாட்டை விட்டும் வெளியேற வேண்டும் என்பனவாகும். இங்கு ஒரு மனிதனை கொலை செய்வதனையும், அவன் நாட்டை துறந்து வெளியேறி விடுவதனையும் அல்லாஹ் சம தரத்தில் உள்ள தண்டனையாக நோக்குவதனை அவதானிக்கலாம். அதாவது ஒருவன் தனது தேசத்தில் தொடர்ந்தும் வாழ்வது அவனுக்கு உயிர் வாழ அனுமதிப்பதற்கு சமனானதாகும். அதாவது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் தேசம் என்பது ஒரு மனிதனின் உயிருக்கு சமனானது என அல்-குர்ஆன் குறிப்பிடுகிறது.
'மரணத்திற்கு பயந்து தனது தேசத்திலிருந்து ஆயிரக் கணக்கான எண்ணிக்கையில் வெளியேறுகின்றார்களே! அவர்களை நீர் பார்த்தீரா, அல்லாஹ் அவர்களை நோக்கி நீங்கள் மரணித்து விடுங்கள் எனக் கூறினான்' (அல் பகரா:243)
நவீன இஸ்லாமிய சிந்தனையாளர் கலாநிதி முஹம்மத் இமாரா இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது 'ஒரு சமூகம் தனது தேசத்தின் சுதந்திரத்திற்காக அல்லது விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம், அச்சமூகம் தொடர்ந்தும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றது என இஸ்லாம் கருதுகிறது. அதேபோன்று யாரெல்லாம் தனது நாட்டின் விடுதலைக்காக, எழுச்சிக்காக மற்றும் தனித்துவத்திற்காக போராடாமல் இருக்கிறார்களோ, அவர்கள் இறந்த பிணங்களுக்கு சமமானவர்கள் என்ற கருத்தையே அல்குர்ஆன் மேற்குறிப்பிட்ட வசனத்தில் சுட்டிக் காட்ட முனைகிறது' என விளக்குகிறார்.
தேசம் குறித்து இஸ்லாமிய சிந்தனையாளர்களது பார்வை
இமாம் முஹம்மத் அப்துஹுவின் பார்வையில் ஒரு மனிதன் தனது தேசத்தை சார்ந்து தொழிற்படுவது, சிந்திப்பது மற்றும் அதன் சுதந்திரத்திற்காக, அபிவிருக்திக்காக போராடுவது என்பன அல்லாஹ் ஏற்படுத்திய சமூகவியல் நியதியாகும். மேலும் அதனை யாராலும், எக்காலத்திலும் மாற்ற முடியாது என இமாம் அப்துஹு கருதுகிறார்.
'தேசிய உணர்வின் அடிப்படையில் தனது போராட்டத்தை அமைத்துக் கொள்ளல்' என்ற சிந்தனை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட மதச்சார்பற்ற, தேசியவாதிகளது சிந்தனா முகாம்களிலிருந்து பிறந்ததல்ல என அல்லாமா யூசுப் அல் கர்ளாவி விவாதிக்கிறார். இஸ்லாமிய எழுச்சிக்காகப் போராடிய ஜமாலுத்தீன் ஆப்கானி, இமாம் ஹசனுல் பன்னா, முஹம்மத் அப்துஹூ போன்ற அனைத்து வரலாற்று நாயகர்களும் தங்களது தேசத்தை சார்ந்து நின்றே போராடியிருக்கின்றார்கள் என்பதை அறிஞர் யூசுப் அல் கர்ளாவி அவர்கள் மேலே கூறிய நூலில் தெளிவு படுத்தியுள்ளார்கள். அது மாத்திரமன்றி, 'தேசத்தை கட்டியெழுப்பல்' என்ற சிந்;தனையின் ஆரம்ப கர்த்தாக்கள் இஸ்லாமிய சிந்தனையாளர்களே என்பது கலாநிதி கர்ளாவியின் கருத்தாகும்.
இது குறித்து கலாநிதி கர்ளாவி அவர்கள் மேலும் விவரிக்கும் போது 'இஸ்லாமிய சீர்திருத்தத்திற்காகவும், முஸ்லீம் உம்மத்தின் சுதந்திரத்திற்காகவும் மற்றும் காலனித்துவத்தின் இரும்புக் கரத்திற்கு எதிராகவும் போராடியவர்களது வாழ்கை வரலாற்றை படித்தால், அவர்கள் அனைவரும் சர்வதேச முஸ்லீம் சமூகத்தின் எழுச்சியை தங்களது சிந்தனையில் சுமந்திருந்தாலும், தங்களது நாட்டின் சீர்திருத்தத்தில் அதிகம் சிரத்தை எடுத்துக் கொண்டதனை புரிந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிடுகிறார்.
தேசியவாதம் குறித்து இமாம் ஹசனுல் பன்னாவின் பார்வை
தேசியவாதம் குறித்த இஸ்லாமிய நோக்கை இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் 'எமது அழைப்பு' என்ற ரிஸாலாவில் மிகவும்; நுணுக்கமாக முன்வைத்துள்ளார்கள். இமாம் பன்னாவின் நோக்கில் தேசியம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியவாதம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத தேசியவாதம் என இரண்டாக வகுத்து அவர் அணுகியுள்ளதை காணலாம். இது தேசியவாதம் பற்றிய பன்னாவின் மிக அழகான பகுப்பாய்வுப் பார்வையாகும்.
இஸ்லமிய சட்டப்ப பரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியவாதம் என்பதை இமாம் பன்னா பின்வருமாறு அடையாளப்படுத்துகிறார்.
1. மனித இயல்பின் அடிப்படை என்ற வகையில் தோன்றும் தேசிய உணர்வு. தான் பிறந்த பூமியை நேசித்தல், பற்றுக் கொள்ளுதல் என்பது இதன் அர்த்தம். இது இஸ்லாம் அங்கீகரித்த பகுதியாகும்.
2. அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து தாய்நாட்டை பாதுகாப்பதும் சுதந்திர உணர்வுடன் நாட்டு விடுதலைக்காக போராடுவதும் தனது நாட்டு மக்கள் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ வேண்டும் என்ற சிந்தனையில் எழும் தேசிய உணர்வும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியவாதமாகும்.
3. ஒரு குறித்த நாட்டில் வாழும் மக்கள் ஒற்றுமையாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப உழைத்தல், பல்லின சமூத்தில் இணங்கி வாழ்வதுடன் நாட்டின் தேசிய நலனுக்காகவும், நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் நல்வாழ்வுக்காகவும் உழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றும் தேசியவாதத்தையும் இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.
4. தேசியவாதம் குறித்து பேசுபவர்கள் நிலங்களை வெற்றி கொள்வதின் பால் அழைப்பு விடுக்கின்றனர். உண்மையில் ஏனைய சமூகங்களுக்கு தனது நாடு அனுபவிக்கும் நலன்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையில் நிலங்களை வெற்றி கொண்டு மக்கள் வளமாக வாழ வழிகாட்டும் வகையில் தோன்றும் தேசியவாதத்தையும் இஸ்லாம் அனுமதிக்கிறது. அதனை தேசத்திற்கான அதியுயர்ந்த உழைப்பாகவே இஸ்லாம் கருதுகிறது.
மேற்குறித்த நான்கு பரப்புக்களிலும்; தேசிய உணர்வை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது. அத்தகைய உணர்வில் தேசத்திற்காக பாடுபடுவதனை இஸ்லாம் வரவேற்கின்றது. அந்தப் பாதையில் மரணிப்பதானது அல்லாஹ்வின் பாதையில் மரணிப்பதற்கு சமனானதாக இஸ்லாம் நோக்குகிறது.
ஏற்றுக்கொள்ள முடியாத தேசிவாதம்
ஒரே சமூகத்தை பௌதீக ரீதியாக துண்டாடி பல கூறுகளாக பிரிக்கும் தேசிய உணர்வு போலியானது. ஒரே உம்மத்தான முஸ்லீம் உம்மத்தை பகமை, சதி, போட்டி, பொறாமை போன்றவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தி பலவீனப்படுத்தும் நோக்குடன் இயங்கும் தேசியவாதம் மறுதலிக்கப்ட வேண்டியதாகும். சுயநல அரசியல் இலாபங்களுக்காக தூண்டப்படும் தேசிய உணர்வை இஸ்லாம் அடியோடு மறுக்கிறது. சத்தியத்திற்hக பிரிந்தும் அசத்தியத்திற்காக கூட்டுச் சேரும் சோரம் போன தேசிய உணர்வால் யாருக்கும் இலாபமில்லை என்பதை இமாம் பன்னா அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
இஸ்லத்தின் பார்வையில் தேசத்தின் எல்லைகள்.
தேசியவாதிகள் இஸ்லாமிய சிந்தனையோடு முரண்படும் முக்கிய இரண்டு புள்ளிகளை இமாம் பன்னா அவர்கள் குறித்துக் காட்டுகின்றார். ஒன்று தேசத்தின் எல்லைகள். மற்றது தேசியத்தின் இலக்கு.
1) தேசத்தின் எல்லைகள்: தேசியவாதிகள் பௌதிக நில எல்லைகள் அடிப்படையிலேயே தேசத்தை வரையறுப்பர். இஸ்லாம் நம்பிக்கை கோட்பாட்டின் அடிப்படையிலேயே தேசியத்தின் எல்லைகளை வரையறை செய்கிறது.
2) தேசியத்தின் இலக்கு: தேசியவாதிகள் பௌதிக அபிவிருத்தியை மாத்திரமே இலக்காக கொள்வர். இஸ்லாம் அபிவிருத்தியோடு மனித சமூகத்தின் சுபீட்சத்திற்கான வழிகாட்டல் வழங்குவதையும் இலக்காகக் கொள்கிறது.
தேசிய உணர்வின் முழுமையான வடிவம்
நாட்டுப் பற்று, தேசிய உணர்வு என்பது ஒரு மனிதன் தனது பிறந்த பூமியை விரும்புவதுடன் மாத்திரம் சுருங்கிவிட மாட்டாது. அதற்கு அப்பால் அவன் தன் நாட்டு மக்களை நேசிப்பான். நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான தேசப்பற்று. தேசப் பற்றுள்ள ஒரு குடிமகன் நாட்டின் சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வதும் நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும். நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ அநியாயத்துக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் விடுதலைக்காக போராடுவது உண்மையான நாட்டுப் பற்றாகும். தேசப் பற்று குறித்த அல்குர்ஆனிய சிந்தனையும் இதுவே.
எனவே தான் உமர் (ரழி) அவர்கள் தேசப்பற்றும் தேசிய உணர்வும் இருப்பதால் தான் நாடுகள் வளமாகின்றன என்று கூறினார்கள். நாட்டுப் பற்று தேசிய அபிவிருத்தியின் ஒரு குறியீடாகும். அது வெறுமையான பக்திப் பிரவாகம் அல்ல என்பதே உமர் (ரழி) அவர்களின் கருத்தாகும்.
தேசப்பற்று, தேசிய உணர்வு என்பது இயல்பானது. அதனை ஷரீஆ அங்கீகரிக்கின்றது. அதனால் நாடு வளம் பெறுகின்றது. பிரிவையும் பிளவையும் ஏற்படுத்தும் தேசியவாதத்தை இஸ்லாம் மறுதலிக்கின்றது என்ற உண்மையை அல்குர்ஆன், நபிகளாரின் ஸீரா, ஸஹாபாக்களின் கூற்றுக்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் தேசியம் பற்றிய சிந்தனைகளின் நிழலில் தெளிவாக புரிந்து கொண்டோம்.
எனவே இந்தப் பின்ணணியில் இலங்கை சூழலில் வாழும் முஸ்லிம் சிறுபான்மையான நாம் தேசத்தை கட்டியெழுப்புவதில் உண்மையான உணர்வோடு பங்களிப்பு செய்வது ஒரு தார்மீகக் கடமையாகும்.

புதிய விஞ்ஞான ஆய்வு....!



தாடி வைத்தால் கேன்சர் வருவதை தடுக்கும் புதிய விஞ்ஞான ஆய்வு - இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று விஞ்ஞான உலகத்தினரால் நிரூபிக்கப்பட்டு வருவதால் விஞ்ஞான உலகம் அதிர்ச்சி அடைந்து வருவதை காண முடிகிறது.
யூப்ரடிஸ் நதி வற்றியதை கண்டோம், இரண்டு கடல்களுக்கும் மத்தியில் உள்ள தடுப்பை கண்டோம் இப்படி ஒவ்வொரு சான்றுகளையும் தொடர்ச்சியாக கண்டு வரும் வேளையில்....முகத்தில் ஆண்கள் வைக்கும் தாடியை பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில்....
சூரியனிலிருந்து 95 சதவீத புற ஊதாக்கதிர்கள் நம் சருமத்தை நேரடியாக தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறது என்றும், இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு, சரு புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாடி வைத்திருப்பவர்களுக்கு சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், அவர்கள் பல ஆண்டுகளுக்கு இளமையோடு காட்சியளிப்பர்.
இளைஞர்கள் முகத்தில் தாடி இல்லாமல் இருந்தால் இளமை போன்றும், தாடி இருந்தால் முதியவர்கள் போன்றும் பார்ப்பதற்கு தோன்றும்.
ஆனால் தாடி இல்லாதவர்கள் முகத்தில் சூரியனின் தாக்கம் ஏற்பட்டு விரைவிலேயே அவர்களின் முகம் முதுமையை அடைந்து விடுவதாகவும், தாடி வைத்திருப்பவர்களின் முகத்தில் சூரியனின் தாக்கம் குறைந்து காணப்படுவதால் நீண்ட காலத்திற்கு இளமையாகவே இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தாடி வைத்திருப்போருக்கு உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை... அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் தாடி இருந்தால் எப்போதும் முகம் பிரெஷ்சாக இருக்கும்.
தாடி வைத்திருப்போர் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியும் என்றும், எந்த அளவிற்கு தாடி அதிகம் உள்ளதோ அந்த அளவிற்கு தாடி குளிரை கட்டுப்படுத்தும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சுத்தமாக ஷேவ் செய்வதினால் ஏற்படும் தீமைகள் :
ஷேவ் செய்யும் போது பிளேடினால் ஏற்படும் கீறல்கள், சருமக்கோளாருகள் ஏற்படுகிறது. முழுமையாக ஷேவ் செய்த முகத்தில் பாக்டீரியா உள்ளிட்ட நோய்கள் உடனடியாக தொற்றிக் கொள்கிறது. ஆஸ்துமா, அலர்ஜி, தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமா உள்ளது. இதனால் ஆச்துமாவையும் தவிர்க்க முடிகிறது.
இப்படி பல்வேறு காரணங்களால் தாடி வைப்பது அவசியமாகிறது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனுக்கு எதையெல்லாம் செய்ய கூறியுள்ளதோ அவையனைத்தும் 14 நூற்றாண்டுகள் கழித்து இன்று விஞ்ஞானிகளால் கூறப்பட்டு வருகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கி)களுக்கு மாறு செய்யுங்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 435
இதை மற்ற நண்பர்களும் பார்க்க Share பண்ணுங்கள்..............

9 வேகத்தில் மண்ணுக்கு அடியில் புதையுண்டு செல்வதை கண் கூடாக நாம் காண முடிகிறது).

மூஸா அலை அவர்கள் தன்னை வளர்த்த ஃபிர்அவ்னிடம் இந்த ஓர் இறை கொள்கையை எடுத்து சொன்ன பொழுது பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.
*யார் இந்த ஃபிர்அவ்ன்?

ஃபிர்அவ்ன் (Pharaoh) அமாலிக்கா (அமலேக்கிய) அரசப் பரம்பரையில் வந்த 19 வது எகிப்து நாட்டு அரசனின் புனைபெயர். கிப்தீ (Coptic) குலத்தில் பிறந்த இவன் கி.மு. 15 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்ரவேலர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவந்தான். வரலாற்றாசிரியர்கள் இவனை இரண்டாம் ரம்சேஸ் (Ramses II) என்று குறிப்பிடுகின்றனர்.
ஃபிர்அவ்ன் அரசன் என்பதையும் தாண்டி தன்னை "நான் தான் உயர்வான இறைவன்"என்று பெருமை அடித்து கொண்டிருந்தான்.இந்த பெருமையின் காரணமாக தன்னை பெரும் பெரும் சிலைகளாக வடித்து மக்களை வணங்க சொன்னான்.இப்படிபட்டவனிடம் தான் தூய ஓர் இறை கொள்கையை மூஸா (அலை) அவர்கள் சொன்னார்கள்.


Watch our Video 
Beautilful Masjid of Sri Lanka Part 1

அவனின் செவிப்பறையில் அந்த அழைப்பு விழுந்ததே தவிர செவியின் ஊடாக உட்சென்று மூளையை அடையவில்லை.சத்திய கொள்கையை நபி மூஸா(அலை) அவர்கள் எவ்வளவோ முறை அவனிடம் எடுத்து சொல்லியும் பயனளிக்கவில்லை.

இந்த பிரசாரங்கள் ஃபிர்அவ்னுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.பூமியை படைத்து,அதன் அதன் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்பவன் அல்லாஹ் என்ற ஓர் இறைவான் தான் என்று மூஸா சொல்லியதோடு மட்டுமல்லாமல்,நீ இறைவன் இல்லை,உன்னை வணங்க மாட்டேன் என்றும் எவ்வளவு தைரியமாக என் முன்னே சொல்கிறார்.இப்படியே இதை விட்டுவைத்தால் தனக்கும்,தன் புகழுக்கும் ஆபத்து என்றும்,இவரையும் இவரை பின் பற்றும் சொற்ப கூட்டத்தையும் முழுவதுமாக ஒழித்துகட்டினால் தான் தனக்கு நிம்மதி என்று உறுதி கொண்டான்.

ஆணவமும் அழிவும்:

தன் படை வீரர்களை அழைத்து கொண்டு ஆணவத்துடன் நபி மூஸா (அலை)அவர்களையும் அவர்களின் உம்மத்களையும் அழிக்க புறப்பட்டான் ஃபிர்அவ்ன்.
தன்னையும் தன் சமுதாயத்தையும் காப்பற்றிக்கொள்ள எதிரிகள் இருந்த நகரத்தை விட்டே செல்ல நாடினார்கள் மூஸா (அலை)அவர்கள்.இவர்கள் தப்பித்து செல்வதை தடுத்து இந்த கூட்டத்தை கொள்ள புறப்பட்டார்கள் ஃபிர்அவ்னும் அவனுடைய பட்டாளமும்.

மூஸா (அலை) அவர்களும்,அவர்களின் கூட்டமும் தப்பித்து பிழைக்க ஓடிய பொழுது பாதை எது என்றே அறியாமல் ஓடி கடலின் குறுக்காக வந்துவிட்டார்கள்.
கண்ணெதிரே எதிரிகள் முதுகுக்கு பின் ஆர்பரிக்கும் கடல்.நாம் வசமாக ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களிடம் மாட்டிக்கொண்டோம் என்று மூஸா (அலை)அவர்களின் சமுதாயத்தவர்கள் சொன்னார்கள்.
Watch our Video 
Makkah in 2020, Insha Allah

ஃபிர்அவ்ன் முன்பை விட இவர்களின் மேல் கொடுமைகளை இனி மிக நிறைய புரிய வாய்ப்புண்டு.இனி செய்வதற்கொன்றும் இல்லை என்றே அந்த சமயம் இருந்தது இறை கட்டளை மூஸா நபி அவர்களுக்கு வரும் வரையில்.

அல்லாஹ்வின் கட்டளைகிணங்க மூஸா நபி அவர்கள் தன் கை தடியால் கடலை ஓங்கி அடித்தார்கள்.கடல் இரண்டாக பிளந்தது.மூஸா நபி அவர்களும்,அவர்களை ஈமான் கொண்டு அல்லாஹ்வை ஏற்ற அந்த கூட்டம் உயிர் தப்பியது ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.
மூஸா நபி அவர்களையும் அவர்களின் கூட்டத்தார்களையும் அல்லாஹ் காப்பாற்றியதால் தான் நாம் முஹர்ரம் 9,10 ஆஷுரா நோன்பு வைக்கின்றோம்.

ஆஷுரா நோன்பு:

.நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்றிருப்பதை பார்த்து, இது என்ன? என வினவினார்கள். அதற்கு அவர்கள், மூஸா (அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் (ஃபிர்அவ்னிடமிருந்து) அல்லாஹ் காப்பாற்றிய ஒரு நல்ல நாளாகும் என்றார்கள், (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அந்த நாளில் நோன்பு நோற்று உங்களைவிட மூஸா (அலை) அவர்கள் விச யத்தில் நான் மிக தகுதியுடையவர் எனக்கூறி தானும் அந்த நோன்பை நோற்று அந்த நோன்பை நோற்கும்படி (தன் தோழர்களுக்கும்) ஏவினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

ஆஷுரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர் வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)
இந்த நோன்பை நாமும் நோற்று நமது குடும்பத்தார்களையும் நோன்பு நோற்க ஆர்வபடுத்த வேண்டும்.

ஆஷுராவின் படிப்பினை:

இன்னல்களும்,பிரச்சனைகளும் நம்மை எதிர் நோக்கும் பொழுது எகின் என்னும் "நிலைகுலையாத" தன்மை நம்மிடம் இந்த வரலாறு ஏற்படுத்தவே இறைவன் இச்சம்பவத்தை நமக்கு சொல்கிறான்.
நாம் வாழும் சூழலில் இஸ்லாம் பல தகவல் தொடர்பு சாதனங்களின் மூலமாக தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு,தாக்குதலுக்கு உட்பட்டாலும் "நிலைகுலையாத" தன்மையின் மூலம் அவற்றை எதிர் கொண்டு இஸ்லாத்தை நாம் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.

பொய் புரட்டு வாதங்களை கொண்டு இஸ்லாம் குறிவைக்கப்படுவதால் உண்மையை எடுத்து சொல்வதில் சோர்வடைந்து இந்த சத்திய கொள்கையை விட்டே நாம் விரண்டோட கூடாது.உண்மையை சொல்வதென்றால் இஸ்லாத்தின் எதிரிகள் இப்படி நாம் வேருண்டோடுவதையே விரும்புகின்றனர்.இவர்களுக்கு வழி விடாமல் இஸ்லாமை நாம் வழுவாக பற்றி பிடிக்க அல்லா நம் அனைவருக்கும் துணை புரிவானாக............

அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைகின்றனர்.(தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைபடுத்தாமல் விட மாட்டன்.
அல் குர்ஆன்:9:32

Galle Muhidheen Jumma Masjidh

Galle Muhidheen Jumma Masjidh is one of the oldest​ mosques​ in Sri Lanka which is situated in Galle. Galle is the Southern Coastal capital of Sri Lanka . This Masjidh has been built in A.D 754.
இலங்கையில் முதலில் நிர்மாணிக்கப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று. முஹித்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல் கி.பி 754 ஆண்டில் இலங்கையின் தென் பகுதியின் தலை நகரான காலி சோைல நிர்மாணிக்கப்பட்டது. அரபு வர்த்தகர்களால் இது நிர்மாணிக்கப்பட்டது. உம்மைய வம்ச ஆட்சிக்கு முடிவுகட்டிய அப்பாஸிய ஆட்சியின் முதலாவது ஆட்சியாளர் அபுல் அப்பாஸ் அஸ் ஸபா மறைந்த ஆண்டில் இந்த பள்ளிவால் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்

தம்பிலா மரக்கலே மினிசு


சிங்கள இனவாதிகள் முஸ்லிம்களை நோக்கி பயன்படுத்து மற்றுமொரு வார்த்தை “தம்பிலா” என்பதாகும். இவ்வார்த்தை முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வார்த்தையாக கருதமுடியாது. சாதாரணமாக தம்பி என்பது சகோதரனைக் குறிக்கிறது. தம்பிலா என்பது சகோதர்களே என்ற பொருளை விளக்குகின்றது.

சமூகத்தில் நல்பெயருடன் செல்வாக்குமிக்கவராக திகழும் முஹம்மத் என்பரின் சகோதரர் என்பதை முஹம்மத் தம்பி என அழைப்பர். அதுபோல லெப்பைத் தம்பி, இளைய தம்பி, மூத்தம்பி, மம்மத்தம்பி, பக்கீர்தம்பி, நேந்தம்பி இவ்வாறாக தம்பி என முடியும் பெயர்களும் முஸ்லிம்களிடத்தில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன.

இது சிங்கள மக்கள் மத்தியில் புழக்கத்திலிருக்கும் பண்டாரலா, சில்வாலா, ராஜபக்ஷலா, சிறிலேனலா என்பது போன்று தம்பிலா என அழைக்கப்படுகின்றன. இத் தம்பிலா என்பது சிங்கள மக்களின் சகோதர இனத்தவர்கள் என்பதையும் குறிக்கின்றது.

எது எப்படியோ சிங்கள இனவாதிகள் மரக்கலே, தம்பிலா என்ற வார்த்தைகளை அவர்கள் கோபத்துடன் பயன்படுத்தும் போது அதன் அர்த்தம் ஒருபோதும் மாறப் போவதில்லை. இவ்வார்த்தைகள் இரண்டும் புராதன காலம் தொட்டு முஸ்லிம்களை கௌரவமாக அழைக்க வேண்டும் என்பதற்காக சூட்டப்பட்டது என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள விளைய வேண்டும்.

எனவே, வரலாற்று நெடுகிலும், சுதந்திர போராட்டத்திலும் அதனைப் பெற்றுக் கொண்டதிலும் இந்நாட்டில் வாழ்ந்த சுதேச முஸ்லிம்கள் இந்நாட்டு பெரும்பான்மை பௌத்தர்களுடன் இணைந்து தீர்மானங்களை மேற்கொண்டுவந்தமை தொடர்ந்து இருந்து வருகின்றது.

முஸ்லிம்கள் இவ்வாறான விட்டுக் கொடுப்புக்களை வழங்காதிருந்தால் இந்நாடு இன்றைய நிலையை அடைய இன்னும் நீண்ட காலம் செல்லும் என்பதை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நடுநிலை புத்தி ஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.

பௌத்த சமயத்தின் சிங்கள முஸ்லிம் உறவை அடிப்படையாகக் கொண்டு பல நிகழ்ச்சித் திட்டங்களையும் போராட்டங்களையும் முன்கொண்டு செல்லும் வட்டரக்க விஜித தேரர், கல்கந்த தம்மானந்த தேரர், சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேத வீரவர்தத்ன போன்றோர் அழுத்தமாக தெரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டை அழிக்கும் நோக்கில் நாட்டுக்குள் புகுந்த வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகள் முயன்ற பல சந்தர்ப்பற்பன் முஸ்லிம்கள் நாட்டின் இறைமையை பாதுகாத்து தாய்நாட்டுக்காக போராடிவந்துள்ளார்கள். தவிர முஸ்லிம்கள் ஒருபோது நாடு பிடிக்கும் எண்ணம் கொண்டு தனிப்பிரிவினை கோரி நிற்கும் போராட்டத்திலோ ஈடுபடவில்லை. அவர்கள் சிங்கள அரசர்களுடன் இணைந்து வாழ விரும்பும் சமூகம் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

(கடந்த 03.09.2018 நவமணி பத்திரிகையில் வெளியான எனது கட்டுரையின் ஒரு பகுதி)

இலங்கையின் இளம் ஆளுமை ரஸ்னி ராஸிக்கின் அர்ப்பணிப்புகள் பற்றி ஒரு பார்வை..

2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர்தான் ரஸ்னி ராஸிக். குழந்தைகள் பராமரிப்பு உலக அமை...