Friday, February 8, 2019

மனித மூளையின் செல்களும், அல்லாஹ்வின் அருட்கொடையும்.!

அல்லாஹ் நமக்கு அளித்த அருட்கொடைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று,

நமது மூளையும்
அதன் செயல் திறனும்,

இதனால் மட்டுமே நாம் நொடிப்பொழுதில்
பல விதமான காரியங்களை செய்கிறோம்.

இந்த மூளைக்கு மிக மிக உறுதுணையாக இருப்பது மூளையில் மிகமெல்லிய மூளை செல்கள்.

பில்லியன்கணக்கான இந்த மூளை செல்கள்,

மற்றும் ட்ரில்லியன் கணக்கான நுண்ணிய நரம்புகளின் கட்டமைப்பே மனிதனின் மூளையாக உள்ளது.

உங்கள் மூளையில் எத்தனை செல்கள் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?

சராசரியாக 1.5kg - 1500 கிராம் எடை இருக்கும் ஒரு மூளையின் செல்கள்,

86 பில்லியன்
(எண்பத்து ஆறாயிரம் கோடி
86,000,000,000)
நியூரான் செல்களும்,

85 பில்லியன்
(எண்பத்து ஐயாயிரம் கோடி
85,000,000,000)
நான்-நியூரான் செல்களும் இருக்கும்.

மொத்த செல்களின் அளவு,

86,000,000,000 +
85,000,000,000 = ????

அல்லாஹூ அக்பர்!!!!!!!!!

அறிவியல் ஆய்வாளர்களின் கருத்துக்கணிப்பு முடிவு சொல்கிறது,

இந்த ஒரு செல்லை, ஒரு மண் அளவில் ஆக்கி,
மொத்த மனித மூளையின் செல்களையும்,
ஒரு பெரிய லாரியில் நிரப்பினால்.

அந்த லாரியின் கொள்ளவை விட இந்த செல்களின் அதிகரித்து காணப்படும் என்கிறார்கள்.

அல்லாஹூ அக்பர்.

மிக நுட்பமாகவும்,
மிக நேர்த்தியாகவும், மனிதனைப் படைத்த அளவற்ற அருளாளன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும்,
சான்றுகளையும் சிந்திக்காதோர்களே!

சற்று இந்த குர்ஆனின் பக்கம் செவி சாய்க்கமாட்டீர்களா???

அவன் உங்களுக்குத் தனது அத்தாட்சிகளைக் காட்டுகிறான்.

அல்லாஹ்வின் எந்தச் சான்றுகளை நிராகரிக்கிறீர்கள்?

திருக்குர்ஆன் 40:81

சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...

படியுங்கள்...
பகிருங்கள்...

நமது முகநூல் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்...

திருக்குர்ஆனில் அறிவியல்...
மறுமை நாளை நோக்கி..



Like our Page - Sri Lankan Muslims


.Subscribe to our Channel - NAC

No comments:

Post a Comment

இலங்கையின் இளம் ஆளுமை ரஸ்னி ராஸிக்கின் அர்ப்பணிப்புகள் பற்றி ஒரு பார்வை..

2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர்தான் ரஸ்னி ராஸிக். குழந்தைகள் பராமரிப்பு உலக அமை...