Friday, February 8, 2019

மர்ஹூம் முகம்மது அப்துல் பாக்கிர் மாக்கார்-பேருவளை தந்த ஆளுமை






பேருவளைதந்த ஆளுமை
மர்ஹூம் முகம்மது அப்துல் பாக்கிர் மாக்கார் 
1917ம் ஆண்டு மே 12ம் பேருவளையில் அக்கீம் அலியா மரிக்கார் , றாஹிலா உம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை சென் செபத்தியன் கல்லூரியிலும உயர்பிரிவை கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலும் மேற்கொண்டார். இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட அவர்கள் கிரசனட் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் செயற்பட்டார்.
1938ம ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரிக்கு உள்வாங்கப்பட்டு 1950 இல் பட்டம் பெற்றார். இடைநடுவே இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1942 இல் குடிமைப் பாதுகாப்புப் படையில் இணைந்து சேவையாற்றினார். இதற்கென இந்தியா சென்று பயிற்சி பெற்றார். போரின் பின்னர் சட்டத் துறையில் பணியாற்றியதோடு அக்காலகட்டத்தில் களுத்துறை சட்டத்தரணிகள் அமையத்தில் தலைவராகவும் இருந்தார்.1950ம் ஆண்டு பேருவலை நகர சபை உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மார்ச் 1960ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பேருவளைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பேருவலைத் தொகுதியின் முதலாவது உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றார்.
பின்னர் 1965,1977 ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.1977ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரை பிரதி சபாநாயகராகவும், 1978ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை சபாநாயகராகவும் பணியாற்றினார். 1981ம் ஆண்டில் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி இல்லாத போது நாட்டின் தலைவராகவும் ,1983ம ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை அமைச்சரவை சாராத அமைச்சராகவும், 1988ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை தென் மாகாணசபை ஆளுனராகவும் பணியாற்றினார். சமூக சேவையில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொண்ட பாக்கீர் மாக்கார் அவர்கள் இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பின் துணைத் தலைவராக,ஈராக்-இலங்கை நட்புறவு சங்கத்தினை உருவாக்கி அதன் தலைவராக,அகில இலங்கை முஸ்லிம லீக வாலிப ஒன்றிய இஸ்தாபகத் தலைவராக ஊர் ஜமாத் கவுன்சில் தலைவராக என பல வழிகளிலும் சமூக அபிவிருத்தியில் பங்காற்றினார்.
இவரது வேண்டுகோளின் பேரிலேயே ஏராவூர் சத்தாம் ஹுஸ்ஸைன் நகர் ஈராக் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .இவ்வாறும் நாட்டிற்கும் சமூகத்துக்கும் சேவைகள் பல ஆற்றிய பாக்கீர் மாக்கார அவர்கள் தனது 80வது வயதில் இறையடி சேர்ந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியுன்.1992ம் ஆண்டு இலங்கை அரசு தேசமாணிய விருது வழங்கியதோடு 2008ம் ஆண்டு அவர் நினைவாக தபால் முத்திரையும் வெளியிட்டு கௌரவப்படுத்தியது. அல்லாஹ் அன்னாரது சேவைகளை பொருந்திக்கொளவானாக

Like our Page - Sri Lankan Muslims

.Subscribe to our Channel - NAC

No comments:

Post a Comment

இலங்கையின் இளம் ஆளுமை ரஸ்னி ராஸிக்கின் அர்ப்பணிப்புகள் பற்றி ஒரு பார்வை..

2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர்தான் ரஸ்னி ராஸிக். குழந்தைகள் பராமரிப்பு உலக அமை...