Sunday, February 10, 2019

இலங்கையின் இளம் ஆளுமை ரஸ்னி ராஸிக்கின் அர்ப்பணிப்புகள் பற்றி ஒரு பார்வை..

2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர்தான் ரஸ்னி ராஸிக்.

குழந்தைகள் பராமரிப்பு உலக அமைதி மற்றும் மனித உரிமைகள் போன்ற துறைகளில் இளம் வயதிலேயே ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புகளுக்காகவே இந்த உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

கண்டி நகரின் அநாதரவான சிறுவர்களுக்கும் வயோதிபர்களுக்கும் ஆதரவு வழங்கும் பணியை ரஸ்னிராசிக் பெரிதும் நேசிக்கிறார்.

அநாதரவான சிறுவர்களைப் பராமரிப்பதில் பெருவிருப்பம் கொண்டுள்ள ரஸ்ணி ராசிக் அதற்காக தனது தொழிலை கைவிட்டு விட்டு, தன்னைப் போன்ற சில தனிநபர்களை இணைத்துக் கொண்டு ' சுவனத்தின் முத்துக்கள்' (Pearls of Paradise) எனும் இல்லத்தை ஆரம்பித்து அநாதரவான சிறுவர் களை பராமரித்து வருகின்றார்.

அத்துடன் வறிய குடும் பங்களுக்கு உதவும் பொருட்டு "நலன் மையம்" (Care Sation) எனும் அமைப்பொன்றையும் இவர் ஆரம்பித்துள்ளார்.

ஐநாவின் அகதிகளுக்கான ஆணையகத்தின் செயற் றிட்டத்தின் கீழ் இலங்கை அகதிகளுக்கான உள ஆற் றுப்படுத்தல் வளவாளராக தற்போது பணியாற்றி வரும் சகோதரி ரஸ்னி சமூகத்தில் சாதக மாற்றங்களை ஏற்ப டுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார் .

அாதரவான சிறுவர்களின் நலன்கள் உலக அமைதி மற்றும் மனித உரிமைகளை பேணல் தொடர்பில் ரஸ்ணியின் அளப்பரிய பங்களிப்புக்களை இனங்கண்ட Junior Chamber international எனும் சர்வதேச தன்னர்வா அமைப்பு ரச்னிக்கு சிறந்த இளம் ஆளுமை" விருதை வழங்கி கெளரவித்துள்ளது.

முஸ்லிம் சமூகத்திலிருந்து இவ்வாறு இளம் வயதிலேயே சமூகப்பணியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் சகோதரி ரஸ்னி ராஸிக் சகலருக்கும் முன்மாதிரியாக விளங்குவதுடன் நமது சமூகத்திற்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.

கம்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட28 வயதான ரஸ்னி விருது பெற்றுக் கொண்டமை, முன்னெடுத்துவரும் சேவைகள் தொடர்பில் வழங்கிய நேர்காணலை இங்கு தமிழில் தருகிறோம்.

தமிழில் : ஹஸன் இக்பால்-

கேள்வி: சமூகநல சேவைகள் தொடர்பிலான ஈடு பாடு எவ்வாறு ஆரம்பித்தது?

பதில் : சமூக நலன் சார்ந்த சேவைகள் மீதான ஈடுபாடு ஒரேநாளில் சடுதியாக ஏற்பட்டதொன் றல்ல. எனது சிறுபராயத்தில் கிராமத்தில் வாழ்ந்து வந்த எனது பெற்றோரின் தாய், தந்தையர்கள் கஷ் டத்தில் வாடும் வறிய மக்களுக்கு உதவி வருவதை அவதானித்து வந்திருக்கிறேன்.

அவர்கள் உணவு சமைக்கும்போது எப்போதும் மேலதிகமாகவே சமைத்து வைத்துக் கொள்வர் பசியுடன் கேட்டு வருவோருக்கு அதனை வழங்கி அவர்களது பசி தீர்த்து மகிழ்வர்.

இது நாளாந்தம் நடைபெற்று வந்த வகையில் அதனை நான் அருகில் இருந்து பார்த்து வளர்ந்தேன்.

பின்னர் நானும் இவ்வாறு தேவை யுடையோரின் பசி போக்கிட வேண்டும் எனும் எண்ணத்துடன், எனது நண்பியினால் நடாத்தப்பட்டு வரும் Child Action Lanka எனும் ஆதரவற்ற சிறுவர் களுக்கான மையத்திற்கு உதவி வந்தேன்.

அங்கே இருந்த சிறுவர்களின் கதைகளை கேட்டதும், அவர்க ளுக்கு முற்று முழுதாக உதவ வேண்டும் என தீர்மாணித்து எனது தொழிலை ராஜினாமா செய்தேன்.

கேள்வி: முன்பள்ளி ஆசிரியையாக இருந்த நீங்கள் அதனை ராஜினாமா செய்து விட் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லத்தில் சேவையாற்ற இணைந்து கொண்டதன் பிற்பாடு நடந்தவை பற்றி கூறுங்கள்?

பதில்: சிறுவர் இல்லத்தில் முழுநேர தன்னார்வ தொண்டராக என்னை இணைத்துக் கொண்டேன். கண்டியில் அமைந்துள்ள சிறுவர் இல்லங்களிலும் அதேநேரம் முதியோர் பராமரிப்பு இல்லங்களிலும் பணியாற்றி வந்தேன்.

ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு சிறுவர் அல்லது முதியோர் இல்லத்திற்கு விஜயம் செய்வேன் மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் சித்த சுவாதீனமற்ற சிறார்களுக்கான பராமரிப்பு இல்லமான தய நிவச மையம் என் மனதோடு ஒன்றிப் போய்விட்டது.

வாரத்திற்கு ஏழு நாள் வீதம் முழுநேரமாக இவ்வாறு நான் பணியாற்றினேன் வீட்டை விட்டு அதிகாலை 5.30 மணிக்கு வெளிக் கிளம்பி மாலை 500 மணிக்கு வீடு திரும்புவேன் அநாதரவானோருக்கு கைகொடுக்கும் பணியானது எனது வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது.

தன்னந்தனியாகவே நான் அனைத்தையும் மேற் கொண்டு வருவதாலும் தெருவோரச் சிறார்களை தனியாகவே நான் தேடிச் செல்வதாலும் ஆரம்பத்தில் எனது பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் பெரிதும் கவலை கொண்டிருந்தனர்.

பகல் வேளைகளில் பெரும்பாலும் அச்சிறுவர்கள் வெளிவருவதில்லை மாலை அல்லது இரவு வேளைகளிலேயே எதை யாவது பெற்றுக் கொள்ள தெருவோர சிறுவர்கள் வெளிவருவர்.

கேள்வி நீங்கள் ஆரம்பித்த காலப்பகுதியை விட தற்போது உளவியல் துறை வளர்ச்சியடைந்து வரும், செல்வாக்கு மிகுந்த துறையாக மாறி வருகின்றது. இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்?

பதில் முன்னரை விட தற்போது உளவியல் துறையை பெரும்பாலானோர் விருப்பத்துடன் தெரிவு செய்வதையும், பிரபலம் பெற்ற பல முன்னணி கல்வி நிலையங்கள் உளவியல் துறையை மேம்படுத்தி அறிமுகப்படுத்தி வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

ஆண்கள் கூட உளவியல் கற்கைகளில் பெருவிருப்பத்துடன் ஈடுபட்டு வரு கின்றனர். ஆண்,பெண் வேறுபாடற்ற வகையில் அனைவரும் உளவியல் துறையில் ஈடுபாடு காட்ட வேண்டும் தம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் சிறப் பான முறையில் அணுகுவதற்கு அனைவருக்கும் ஏதோவொரு வகையில் உளவியல் கற்கை அவசிய மாகின்றது

கேள்வி: சுவனத்தின் முத்துக்கள்' (Pearls of Paradise) சிறுவர் மையம் பற்றிக் கூறுங்கள்?

பதில் கண்டி நகரில் சுமார் 35 சிறுவர் நல மையங்கள் உள்ளன. இருப்பினும், இஸ்லாமிய சூழ லுடன் கூடிய சிறுவர் நல மையம் ஒன்று இல்லாத குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என நான் நினைத்தேன்

நான் விஜயம் செய்யும் ஏனைய சிறுவர் மையங் களில் அவரவர் சமயம் கற்பிக்கப்படுகிறது. இதற்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அவர்கள் அறிந் ததை அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். எனினும் அங்கே வாழ்ந்து வரும் முஸ்லிம் சிறுமிகள் என் னிடம் வந்து தனிப்பட்ட முறையில் தாங்களும் முஸ்லிம்கள் என்பதை தெரியப்படுத்திக் கொண்டனர்.

அச்சிறுவர் இல்லம் பின்பற்றி வரும் சமயத்திற்கு ஏற்ப அவர்கள் தங்களது ஹிஜாபை அகற்ற வேண்டி யுள்ளது.

அவர்களை அச்சிறுவர் இல்லத்தை விட்டும் வெளியகற்றுவது நீண்டதொரு செயன்முறையாக அமைந்தது.

அநாதரவான சிறுவர்களில் 20 வீதமானவர்களே பெற்றோரை இழந்த அநாதைகள், ஏனையோர் ஒன்றில் பெற்றோரினால் கைவிடப்பட்டவர்கள் அல்லது பெற்றோரில் ஒருவரை மாத்திரமே கொண் டிருப்பவர்கள் அவர்களின் அனுமதி இன்றி, உரிய அதிகாரிகளின் ஒப்புதல்கள் இன்றி அவர்களை நாம் இடமாற்ற முடியாது.

குறித்த முஸ்லிம் சிறுவர்கள் தங்களது விருப்பத்திற்கு மாறாக மாற்று மத நடை முறைகளை பின்பற்ற வேண்டி இருக்கின்றமை என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது.

இதுவே கவனத்தின் முத்துக்கள் (Pears of Paradise) சிறுவர் மையத்தை நான் ஆரம்பிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

மையத்தின் தற்போதைய வளர்ச்சிப் போக்கு குறித்து கூறுங்கள்?

பதில் சிறுவர் பராமரிப்பு மையம் ஒன்றை ஆரம் பித்து நிர்வகிப்பது என்பது தனியொருவரினால் மாத்திரம் சாத்தியமான ஒன்றல்ல. என்னைப் போன் றவர்களும் என்னை விடவும் இத்துறையில் அதிக அனுபவம் கொண்டவர்களும் இணைந்த குழு வொன்றின் கூட்டு முயற்சியினாலேயே இது சாத்திய மாயிற்று.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு இச்சிறுவர் மையத்தினை ஆரம்பித்தோம் நாம் ஆரம்பித்துள்ள 'சுவனத்தின் முத்துக்கள் எனும் இச்சிறுவர் மையமானது அனைத்து மதங் களை சார்ந்த, நாட்டின் அனைத்து பகுதிகளைச் சார்ந்த அநாதரவான சிறுவர்களுக்கும் பொதுவானது எனினும், மிக மிகத் தேவையுடைய சிறார்களுக்கே நாம் முன்னுரிமை அளித்து வருகிறோம் இம்மையத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னர் சில ஆய்வு நடைமுறைகளை நாம் மேற்கொள் கிறோம்.

மேலும் நான் ஆரம்பித்துள்ள Care Station எனும் அமைப்பின் ஊடாக இச்சிறார்களின் குடும்பங் களுக்கும் உதவியளித்து வருகின்றோம். சிறுவர்கள் தமது குடும்பத்துடன் வளர்வதையே நாம் ஊக்கு விக்கிறோம். இதன் பொருட்டு அவர்களுடன் பேசித் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்கு முன்னுரிமையளித்து வருகிறோம் எது எவ்வாறிருப்பினும், பெற்றோர் தமது பிள்ளைகளிடத்தில் காட்டும் அன்பு ஆதரவு, அரவ ணைப்புக்கு சரிநிகர் சமமான கவனிப்பை எம்மால் வழங்கிட முடியாது என்பது நிதர்சனம். எவ்வாறான துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள் இடம்பெற் றிருப்பினும் பொதுவாக பிள்ளைகள் அவர்களது பெற்றோருடனேயே வாழ்வதற்கு விரும்புகின்றன தற்போது எமது மையம் 65 அநாதரவான சிறார்களை ஆதரித்து வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் அங்கே முழுநேரமாக தங்கி வருபவர்கள்.

கேள்வி: சிறுவர் மையத்தினை ஆரம்பித்து நடத்துவதில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் பற்றி கூறுங்கள்?

பதில் சிறுவர் மையம் ஒன்றை ஆரம்பித்து நடத்துவதற்கான தகைமை என்னிடம் உள்ளது என்பதை மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு அவர் களுக்கு என் மீது நம்பிக்கையை வரவழைப்பதற்கு நான் பெரும் சிரமப்பட்டேன்.

என்னை சிறுமி என அவர்கள் கருதிக் கொண்டனர் போலும் எனது முயற் சியின் தீவிரத்தை அவர்கள் ஆரம்பத்தில் புரிந்து கொள்ளவில்லை எனினும், காலப்போக்கில் எனது முயற்சியை பொருட்டாக மதித்த பிரதேசவாசிகள் தம்மாலான பங்களிப்புக்களை வழங்கினர்.

இம்மையத்திற் கான காணியைக் கொள்வனவு செய்வதற்கு மாலைதீவைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் நிதியுதவி வழங்கினார் சிறுவர் மையம் அமைப்பதற்கென காணியை கொள்வனவு செய்த பின்னரே எனது முயற்சியின் தீவிரத்தை பெரும்பாலானோர் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர்.

காணியைக் கொள்வனவு செய்த பின்னர் துருக் கிய நலன்புரி அமைப்பின் நிதியுதவியுடன் நான்கு மாடிக் கட்டிடத்தை எழுப்பினோம். எனினும், சிறுவர் மையத்தின் நாளாந்த செயற்பாடுகளுக்கான நிதி யுதவி, முற்று முழுதாக உள்நாட்டு தனவந்தர்கள் மூலமே பெற்றுக் கொள்ளப்படுகிறது .

இங்கே ஆதரவு பெற்றுள்ள சிறுவர்களில் சிலர் பாடசாலைக்கே சென்றிராதவர்கள், பலர் பாடசா லையை இடைநடுவில் கைவிட்டவர்கள் பெண்கள் தமது ஆளுமைகளை வெளிப்படுத்துவ ற்கு இஸ்லாமிய மார்க்கம் தடை விதித்துள்ளதாக பலர் எண்ணுகின்றனர்.

சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் பல பெண்கள் வகிபாகம் ஆற்றி வருகின்றனர் னையோருக்கு உதவுவதில் பேரார்வம் கொண்ட பல பெண்களை நான் சந்தித்துள்ளேன். எனினும் மூகத்தில் வெளியே சென்று சேவையாற்ற எத்த ரிக்கும் தருணம், ஏனையோர் தம்மை எவ்வாறு த்திரிப்பார்களோ என எண்ணி தயங்கி நிற்கும் பல முஸ்லிம் பெண்களை நான் அறிவேன் என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு என் தாயே கெப் பெரும் முன்மாதிரியாக இருந்துள்ளார் என கூறுவேன்.

தெருவில் அநாதரவான நிலையில் இருப் வர்களை காணும் தருணம் ஓடிச் சென்று அவர் ளது பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடவே என்னுள்ளம் முனையும்.

மாறாக ஒதுங்கிச் செல்லவோ மூகம் பற்றி தயக்கம் கொள்ளவோ மாட்டேன்.

நான் பின்பற்றும் மார்க்கம் இதற்கு தடை விதிக்கவில்லை; மாறாக ஏனையோருக்கு உதவுவதை அது வரவேற் லுள்ளது. அது போல ஏனைய மதங்களும் உதவி புரிவதற்கு தடை விதிக்கவில்லை

கேள்வி: இவை தவிர்த்து வேறு எவ்வாறான ஐட்டங்களில் நீங்கள் ஈடுபட்டு வருகின்கள்?

பதில் நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் Care Sation எனும் அமைப்பை நடாத்தி வருகின்றேன் மேலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அநாதரவான சிறுவர்கள் தொடர்பிலான DACT நிகழ்ச்சித் திட்டத்தில் பங்களித்து வருகிறேன் மத்திய மாகாணத்தில் அந்நிகழ்ச்சித் திட்டத்தை
தலைமை தாங்கி வழிநடாத்தி வருகிறேன்.

அத்துடன் Care Station அமைப்பினால் மீண்டும் (back to school projects) செயற்றிட்டத்தின் மூலம் பாடசாலை கல்வியை ஊக்குவித்து வருகிறோம்.

கல்வி ரீதியாக தேவையு டைய மாணவர்களுக்கு உதவியளித்து வருகிறோம் இவ்வமைப்பின் மற்றோர் செயற்றிட்டமாக தெரிவு செய்யப்பட்ட இருப்பிடமற்ற வறிய குடும்பங்க ளுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கென 37 பேர்ச் காணியை கொள்வனவு செய்துள்ளோம்.

அதில் ஆரம்பக் கட்டமாக ஏழு வீடுகளை எழுப்பவுள்ளோம் வறியோருக்கு உணவளிப்போம் செயற்றிட்டத்தின் மூலம் பசியில் வாடும் குடும்பங்களுக்கு உணவ ளித்து வருகின்றோம்

Watch our Video 
Beautilful Masjid of Sri Lanka Part 1

பதில் இவ்விருது கிடைக்கப்பெறும் வரை அதன் பின்னரான அமோக ஆதரவு மற்றும் புகழாரங்கள் என்னை வந்தடையும் வரை அவ்விருதின் முக்கியத் துவம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

இவ்விருது கிடைக்கப் பெறுவதாக முன்னர் எனக்கு அறிவிக் கப்பட்ட போதும் கூட அது தொடர்பில் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை இவ்விருதுக்கு விண்ணப்பிக்குமாறு அநேக நண் பர்கள் என்னை வற்புறுத்தினர்.

இருப்பினும், மின் னொளியில் மேடையேறுவதில் எனக்குப் பெரிதும் விருப்பம் இருந்ததில்லை. விருதுக்கு விண்ணப் பிப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் சேக ரித்து சமர்ப்பித்த வகையில் எனது கணவர் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார் ஆதரவற்ற சிறார்கள் தொடர்பில் மென்மேலும் விழிப்புணர்வுகளை ஏற்ப டுத்தியுள்ளமை மற்றும் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்திக்க வழிவகைகளை உருவாக் கியுள்ளமை தொடர்பில் இவ்விருது கிடைக்கப் பெற் றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எம்மால் முடிந்த வகையில் ஒருவருக்கேனும் உதவுவதன் மூலம் உலகை மாற்றலாம் என நம்புகின்றேன்.

கேள்வி: இந்த விருதை பெற்றுக் கொள்வதற் கான உங்களது தகுதி நிலைகளாக நீங்கள் கருதுவது?

பதில் சிறுவர் உளவியல் மற்றும் பாலர் கல்வி துறைகளில் கல்வித் தகமைகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன். பின்னர் கண்டி போதனா வைத் தியசாலையின் மருத்துவர் நலன்புரிச் சங்கத்தில் இணைந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பல வரு டங்களாக கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளேன் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லம் ஒன்றுக்கு தற்செயலாக விஜயம் செய்து அவர்களது இன்னல்க ளையும் துயரங்களையும் செவிசாய்த்துக் கேட்ட அத் தருணம் எனது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் ஆதரவற்ற சிறுவர்களது நலன்களை பேணுவதும் அவர்களுக்கு மேம்பட்ட வாழ்க்கையொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதும் எனது இலக்காக தீர்மானித்துக் கொண்டேன் அவ்வகையான சிறுவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொடுத்தல், சமூக பாது காப்பை உறுதி செய்தல் போன்றவற்றுக்கான நடவ டிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அது சார்ந்த சிறுவர் நல அதிகாரிகளுடன் இணைந்து கடுமையாக உழைத்தி ருக்கிறேன். இச்சிறுவர்களின் புனர்வாழ்வு நடவடிக் கைகளுக்கு உதவும் நோக்குடன் அயராது பணியாற் றியுள்ளேன் அத்துடன் ஆதரவற்ற, தனித்துவிடப்பட்ட பெண் களுக்கு உளவியல் ரீதியான பலத்தையும், மனோவ லிமையையும் எனது உள ஆற்றுப்படுத்தல் சேவை வாடாக வழங்கி அவர்களது இன்னல்களை போக்க உதவியுள்ளேன் எனது முயற்சிகளுக்கான வெற்றிகளை அடைந்து கொள்வதற்கு பெரும் போராட்டங்களை சந்தித் துள்ளேன். எனது செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நிதியுதவிகளை பெற்றுக் கொள்வதற்கு தனவந்தர்களை, கொடை யாளிகளை அணுகுவது பாரிய சவாலாக இருந்தது எனது சமூகநல செயற்றிட்டங்களுக்கான அனுமதி ஒப்புதல் ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கண்டியிலிருந்து கொழும்புக்கு பல தடவைகள் அலைக்கழிய வேண்டி இருந்தது. எனது வாழ்க்கைத் தொழிலை இடைநிறுத்தி சமூக சேவை செயற்பாட்டாளராக என்னை நான் அர்ப்பணித்துக் கொண்டமையின் பின்னால் பல கடின முயற் சிகள் மறைந்துள்ளன. விடாமுயற்சியுடன் இலக்கு நோக்கிப் பயணிக்கும் எனது கொள்கை என்னை பலப்படுத்தியது.

Watch our Video 
Makkah in 2020, Insha Allah

இதனாலேயே பல சமூக நல செயற்றிட்டங்களை என்னால் நடைமுறைப்படுத்த முடிந்ததுடன் சிறுவர்களின் கற்கும் உரிமையை உறுதிப்படுத்தும் அமைப்பையும் உருவாக்கிக் கொள்ள இயலுமானது ஆதரவற்ற, கைவிடப்பட்ட சிறுவர்களுக்கான புகலிடமாக சுவனத்தின் முத்துக்கள் எனும் சிறுவர் இல்லத்தை ஈகை குணம் படைத்த மனிதநேயர்களுடன் இணைந்து நிர்மா ணித்து நிர்வகித்து வருகின்றமை எனது அத்தனை அடைவுக ளுக்கும் முத்தாய்ப்பாக அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன் வளர்ந்து வரும் இச்சிறுவர் இல்லத்தில் நாடளாவிய ரீதியில் 68 ஆதரவற்ற சிறுமிகள் பராமாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆத ரவற்ற சிறுவர்களின் நலன் காத்தல், மேம்பட்ட வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல், அவர்களது எதிர்காலத்திற் கான சிறந்த அடித்தளம் ஒன்றைக் கட்டியெழுப்புதல் என நான் மேற்கொள்ளவிருக்கும் அத்தனை பணிகளதும் ஆரம்பநிலை யாகவே மேற்படி சிறுவர் இல்லத்தின் நிர்மாணம் அமைந்துள் ளது ஆதரவற்ற குடும்பங்களின் வறுமைநிலையை போக்கிடும் நோக்குடன் Care Station எனும் அமைப்பை உருவாக்கி யுள்ளேன். வீடற்ற, அநாதரவான குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தல், பொருளாதார நிலையை ஸ்திரப் படுத்தல், கல்வியறிவை வழங்குதல் போன்ற துறைகளில் இவ்வமைப்பு கவனம் செலுத்தும். நாடளாவிய ரீதியில் வறிய மக்களுக்கு நிதியுதவிகளை வழங்குதல், அடிப்படைத் தேவை களை நிறைவு செய்தல் எனும் நோக்குடன் வலையமைப்பாக செயற்படுத்தப்படவுள்ளது அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் DAC எனும் சிறுவர் நல செயற்றிட்டத்தின் மத்திய மாகாண செயற்றிட்ட நிர்வாகி யாக சேவையாற்றுகிறேன் UNCHRஇலங்கை அகதிகளுக்கான நல திட்டத்தில் உள ஆற்றுப்ப டுத்தல் நிபுணராக நான் பணியாற்றி வருகிறேன்

கேள்வி: இவ்விருதைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் நீங்கள் நினைவுகூர விரும்புபவர்கள்?

பதில் நான் சேவையாற்றிய அத்தனை சிறுவர்களும் அறக் கட்டளை நிறுவனங்கள், கொடையாளிகள், நலன்புரி அமைப் புக்கள், பல வருடங்களாக இத்துறையில் உரிய வழிகாட்டல் களையும், ஆதரவுகளையும் வழங்கிய எனது பெற்றோர், ஒரு வருடத்திற்கும் மேலாக எனக்கு பெரும் துணையாக விளங்கி வரும் எனது கணவர் ஹிஷாம் ஹனீபா அவரது அன்பு பொறுமை, துணையின்றி என்னால் இந்தளவு தூரம் சாதித்தி ருக்க முடியாது. மேலும் என்னை முன்மொழிந்த அத்தனை பேரையும் இத்தருணத்தில் நான் நினைவுகூர விரும்புகிறேன்.

கேள்வி: சமூக சேவையில் ஆர்வம் காட்டுவதற்கு தூண்டு கோலாக அமைந்தவை என நீங்கள் கருதுவது?

பதில் நான் சேவையாற்றி வந்த ஒவ்வொரு சிறுவர்களும் எனக்கு தூண்டுகோலாக என்னை இலக்கு நோக்கி ஊக்கு விக்கும் கருவியாக அமைந்தனர் என்றே நான் கூறுவேன் எம்முடன் உள்ள அநாதரவான சிறுவர்களிடம் இருந்து அவர் களின் மனவுறுதி, துணிவு என கற்றுக்கொள்ள பல விட யங்கள் உள்ளன. இவ்வாறான தெருவோரச் சிறுவர்கள். அகதி சிறுவர்கள், அநாதைச் சிறுவர்கள் என் வாழ்வில் வேறு எவரும் ஏற்படுத்தாத அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அவ்வகையில் அவர்களுக்கு நான் செய்ததை விட பல மடங்கு எனக்கு செய்துள்ளனர் என்றே கூற வேண்டும்.

கேள்வி எதிர்காலத் திட்டங்கள் பற்றி..

பதில் நேசிப்புடன் கூடிய இல்லம் சிறந்த கல்வி என்பனவே சிறுவர்களை வறுமை நிலையில் இருந்து பாதுகாக்கவும் அவர்களது வாழ்வை மேம்படுத்தவும் உதவும் என நான் நம்புகிறேன். அநாதை இல்லங்களில் வாழும் ஒவ்வொரு சிறுவர் களுக்கும் கல்வியறிவை வழங்குவதே எனது இலட்சியக் கனவாகும். எமது இல் லத்தில் உள்ள சிறுவர்களுக்கும் உள்ளூர் சிறுவர்களுக்கும் கல்வியை வழங்குவ தற்கென பாடசாலையொன்றை நிர்மா ணிக்கும் பணிகள் இவ்வருடம் நிறைவு றுத்தப்படும்.

கண்டி நகரில் காணியொன்றைக் கொள்வனவு செய்துள்ளோம். வறிய வீடற்ற குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

Care Stationஅமைப்பினூடாக நாடாளாவிய ரீதியில் தேவையுடைய மக்களுக்கு நிதியுதவிகள், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களை வளப்படுத்தல், அவர்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுத்தல், சமத்துவமற்ற கல்வி முறைமையை நிவர்த்தி செய்தல், தனித்துவிடப்பட்ட பெண்களுக்கு தேவையான ஊக்குவிப்புக்களை வழங்குதல், சுதந்திரமற்று ஒதுக்கப்படும் மக்களுக்காக பணியாற்றுதல் என்பதே எனது அறுதியான இலட்சியக் கனவாக அமைகிறது

கேள்வி: சமூகத்திற்கு நீங்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன

பதில்: சமூக சேவை என்பது நேரத்தை வீணடிக்கும் ஒரு பணிய பெரும்பாலானோர் கருதுகின்றனர்; மேலும் அதற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கும் தயங்கியே வருகின்றனர் "சமூக சேவையில் ஈடுபடுவதை விடுத்து வேறு தொழில்களில் ஈடுபட்டு அதிக பணம், புகழ், மரியாதைகளை சம்பாதித்துக் கொள்ளுங்கள்" என்பதே சமூக சேவை பணியில் ஈடுபடும் எந்தவொரு நபர் மீதும் ஏனையோரால் முன்வைக்கப்படும் முதல் கருத்தாக காணப்படுகிறது. அதேநேரம் "எமது சமூகத்தில் அதிக சேவையாளர்களை தோற்றவிக்க வேண்டிய தேவை
இருக்கின்றது" என வேறு இடங்களில் குறைபட்டுக் கொள்ளும் முதல் நபர்களாக இவர்களே திகழ்வர்.

தேவையுடையோருக்கு உதவுதல், அவர்களுடன் இணைந்து பணியாற்றுதல் தொடர்பில் எனக்குள்ள பெருவிருப்புக் காரணமாகவே நான் சமூக சேவையை தேர்ந்தெடுத்துள்ளேன் நேசிப்பு மிக்க குடும்பமொன்றில் நான் வளர்ந்தவள். எனினும் ஏனைய சிறுவர்கள் அத்தனை பேருக்கும் அத்தகைய நேச சூழல் கிடைத்து விடவில்லை என்பதை பின்னரே உணர்ந்து கொண்டேன். அவ்வாறான சிறுவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என உறுதிகொண்டேன். சமூக சேவையில் ஈடுபடுவதன் மூலம் மற்றையோரின் உரிமைகளை மதிக்கும் பண்பு உறவுகளை பேணுதல், சமூகத்தின் மீதான பொறுப்புக்களை உணர்தல் என்பவற்றை பெற்றுக் கொள்ள முடியும், சமூக சேவையில் அத்தனைக்கும் மேலாக ஆன்ம திருப்தியைப் பெற்றுக் கொள்ள முடியும், சமூக சேவையில் ஆர்வமுடையவர்களை நான் பெரிதும் நேசிக்கிறேன் ஊக்குவிக்கிறேன்.

விடிவெள்ளி ( 12/01/2018)
தமிழில் : ஹஸன் இக்பால்- 


Like our Page - Sri Lankan Muslims



.Subscribe to our Channel NAC

No comments:

Post a Comment

இலங்கையின் இளம் ஆளுமை ரஸ்னி ராஸிக்கின் அர்ப்பணிப்புகள் பற்றி ஒரு பார்வை..

2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர்தான் ரஸ்னி ராஸிக். குழந்தைகள் பராமரிப்பு உலக அமை...