Saturday, February 9, 2019

தம்பிலா மரக்கலே மினிசு


சிங்கள இனவாதிகள் முஸ்லிம்களை நோக்கி பயன்படுத்து மற்றுமொரு வார்த்தை “தம்பிலா” என்பதாகும். இவ்வார்த்தை முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வார்த்தையாக கருதமுடியாது. சாதாரணமாக தம்பி என்பது சகோதரனைக் குறிக்கிறது. தம்பிலா என்பது சகோதர்களே என்ற பொருளை விளக்குகின்றது.

சமூகத்தில் நல்பெயருடன் செல்வாக்குமிக்கவராக திகழும் முஹம்மத் என்பரின் சகோதரர் என்பதை முஹம்மத் தம்பி என அழைப்பர். அதுபோல லெப்பைத் தம்பி, இளைய தம்பி, மூத்தம்பி, மம்மத்தம்பி, பக்கீர்தம்பி, நேந்தம்பி இவ்வாறாக தம்பி என முடியும் பெயர்களும் முஸ்லிம்களிடத்தில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன.

இது சிங்கள மக்கள் மத்தியில் புழக்கத்திலிருக்கும் பண்டாரலா, சில்வாலா, ராஜபக்ஷலா, சிறிலேனலா என்பது போன்று தம்பிலா என அழைக்கப்படுகின்றன. இத் தம்பிலா என்பது சிங்கள மக்களின் சகோதர இனத்தவர்கள் என்பதையும் குறிக்கின்றது.

எது எப்படியோ சிங்கள இனவாதிகள் மரக்கலே, தம்பிலா என்ற வார்த்தைகளை அவர்கள் கோபத்துடன் பயன்படுத்தும் போது அதன் அர்த்தம் ஒருபோதும் மாறப் போவதில்லை. இவ்வார்த்தைகள் இரண்டும் புராதன காலம் தொட்டு முஸ்லிம்களை கௌரவமாக அழைக்க வேண்டும் என்பதற்காக சூட்டப்பட்டது என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள விளைய வேண்டும்.

எனவே, வரலாற்று நெடுகிலும், சுதந்திர போராட்டத்திலும் அதனைப் பெற்றுக் கொண்டதிலும் இந்நாட்டில் வாழ்ந்த சுதேச முஸ்லிம்கள் இந்நாட்டு பெரும்பான்மை பௌத்தர்களுடன் இணைந்து தீர்மானங்களை மேற்கொண்டுவந்தமை தொடர்ந்து இருந்து வருகின்றது.

முஸ்லிம்கள் இவ்வாறான விட்டுக் கொடுப்புக்களை வழங்காதிருந்தால் இந்நாடு இன்றைய நிலையை அடைய இன்னும் நீண்ட காலம் செல்லும் என்பதை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நடுநிலை புத்தி ஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.

பௌத்த சமயத்தின் சிங்கள முஸ்லிம் உறவை அடிப்படையாகக் கொண்டு பல நிகழ்ச்சித் திட்டங்களையும் போராட்டங்களையும் முன்கொண்டு செல்லும் வட்டரக்க விஜித தேரர், கல்கந்த தம்மானந்த தேரர், சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேத வீரவர்தத்ன போன்றோர் அழுத்தமாக தெரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டை அழிக்கும் நோக்கில் நாட்டுக்குள் புகுந்த வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகள் முயன்ற பல சந்தர்ப்பற்பன் முஸ்லிம்கள் நாட்டின் இறைமையை பாதுகாத்து தாய்நாட்டுக்காக போராடிவந்துள்ளார்கள். தவிர முஸ்லிம்கள் ஒருபோது நாடு பிடிக்கும் எண்ணம் கொண்டு தனிப்பிரிவினை கோரி நிற்கும் போராட்டத்திலோ ஈடுபடவில்லை. அவர்கள் சிங்கள அரசர்களுடன் இணைந்து வாழ விரும்பும் சமூகம் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

(கடந்த 03.09.2018 நவமணி பத்திரிகையில் வெளியான எனது கட்டுரையின் ஒரு பகுதி)

No comments:

Post a Comment

இலங்கையின் இளம் ஆளுமை ரஸ்னி ராஸிக்கின் அர்ப்பணிப்புகள் பற்றி ஒரு பார்வை..

2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர்தான் ரஸ்னி ராஸிக். குழந்தைகள் பராமரிப்பு உலக அமை...