ஒரு மனிதன் சாதாரணமாக தன் வாழ்வில் 45 டெல் வலியை உணர்கிறான். ஆனால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் சாதாரணமாக 57 டெல் மேல் வரை வலியை உணர்கிறாள் என்கிறது அறிவியல். பிரசவத்தின் போது தாங்கமுடியாத வலியை ஒரு தாய் அனுபவிக்கிறாள்.
அந்த வலியை குறைவாக உணர்வதற்காக நவீன விஞ்ஞானம் நீருக்குள் பிரசவம் செய்வதை பரிந்துரை செய்துள்ளது. கிட்டத்தட்ட 70 நாடுகளில் இவை இன்றும் நடைமுறையில் உள்ளது. மேலை நாடுகளில் மகப்பேறு மருத்துவமனைகளில் பிரசவ அறையில் பெரிய தண்ணீர் தொட்டி அமைத்து அதில் நிறைமாத கர்ப்பிணியை பிரசவ நேரத்தில் அந்த தண்ணீர்தொட்டியில் அமர வைத்து விடுகின்றனர். குழந்தை கருப்பையில் நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. தாயும் சிரமமின்றி பிரசவிக்கிறாள்.
வீடியோவாக பார்க்க:YouTube சென்று Water birth videos என்றோ Baby under water, Natural water Birth என்றோ தேடி பார்க்கவும்.
இந்த நீருக்குள் பிரசவம் செய்வதை இன்று அறிவியல் விஞ்ஞானம் நடைமுறைப் படுத்தியதை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நடத்தி காட்டியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
மர்யம் (அலை) என்ற பெண்மணி பிரசவ வலி வந்தது பற்றியும், அப்பிரசவ வலியை குறைக்க இறைவன் ஒரு நீர் ஊற்றை உருவாக்கி வலியை குறைத்தாகவும் கீழ் காணும் உலக மக்களின் நேர்வழிக்காட்டியான திருக்குர்ஆன் கூறுகிறது.
திருக்குர்ஆன் வசனம்:
பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. "நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். "கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
திருக்குர்ஆன்-19: 23, 24
மர்யம் (அலை) வலியை உணர்ந்த போது ஜிப்ரில் (நீர்) ஊற்றை இறைவன் ஏற்படுத்தியுள்ளதாகவும் கவலை வேண்டாம் எனவும் அறிவுரை கூறுகிறார்.
நீருக்குள் பிரசவம் 19:23,24 வசனத்தில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப்போது இதைக் கண்டு பிடித்துள்ளது. இந்த நடைமுறை சாத்தியம் என விஞ்ஞானம் நிருபித்துள்ளது.
1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. உங்கள் கணவன் வீட்டினுள் நுழைந்தது முதல் அந்த வாசனையை உணரச் செய்யுங்கள்.
2. கணவன் ஓய்வெடுக்கக்கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்போதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயற்படுங்கள்.
3. கணவனுடனான தொடர்ச்சியான உரையாடலை, கலந்துரையாடலை பேணிக் கொள்ளுங்கள். வாதாட்டம், தனது கருத்தில் பிடிவாதம் என்பவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
4. உங்களுக்கு ஷரீஆ விதித்துள்ள பொறுப்புக்களை விளங்கிக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய விடயங்களை ஷரீஆ உங்களுக்கு வழங்கியுள்ளது.
5. உங்கள் சத்தத்தை உயர்த்தாதீர்கள். குறிப்பாக கணவன் இருக்கும் போது.
6. நீங்கள் இருவரும் கியாமுல் லைல் போன்ற தொழுகைகளை ஒன்றாக நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். ஏனெனில் அது உங்கள் இருவருக்கும் சந்தோஷத்தையும் அன்பையும் ஒளியையும் ஏற்படுத்துகின்றது.
7. கணவன் கோபத்திலிருக்கும் போது நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி இரவில் உறங்கச் செல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் கணவன் தான் உங்களுக்கு சொர்க்கமும் நரகமும்.
8. கணவன் ஆடைகளை தெரிவு செய்வதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தெரிவு செய்து வழங்குங்கள்.
9. கணவனின் தேவைகளை விளங்கிக் கொள்வதற்கும் அவருடன் அழகிய முறையில் பழகுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.
10. உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்துங்கள்.
11. உங்களுடைய கணவன் தனது அன்பை, விருப்பத்தை வெளிப்படுத்தும் வரை காத்துக் கொண்டிருக்காதீர்கள்.
12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமணப் பெண்ணைப் போல தயாராகி தோற்றமளியுங்கள். கணவனை முந்தி நீங்கள் உறங்கச் செல்ல வேண்டாம்.
13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவராக இருப்பார்.
14. எப்போதும் புன்னகையுடனும் அன்பை வெளிப்படுத்தும் உணர்வுகளுடனும் கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது வரவேற்பளியுங்கள்.
15. கணவனின் திருப்தி அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கு முக்கியமானது என்பதை எப்போதும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். எப்போதும் தோற்றத்திலும் வார்த்தையிலும் அவரை வரவேற்கும் போது புதிய விடயங்களை செய்யுங்கள்.
16. ஏதாவதொரு விடயத்தை கணவன் கேட்கும் போது மறுக்கவோ அல்லது தாமதிக்கவோ வேண்டாம். மாற்றமாக உற்சாகத்துடன் விரைவாக அதனை நிறைவேற்றுங்கள்.
17. வீட்டுத் தளபாடங்களை கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது புதிய முறையில் ஒழுங்குபடுத்துங்கள். அதனை கணவனின் மகிழ்ச்சிக்காகவே செய்கின்றீர்கள் என்பதை உணர்த்துங்கள்.
18. வீட்டை அழகிய முறையில் நிருவகிப்பதற்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் முதன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
19. பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய திறமைகளை திறன்பட கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை உங்களுடைய வீட்டிற்கும் உங்களது தஃவாவிற்கும் அவசியமானவையாகும்.
20. கணவன் வீட்டுக்கு கொண்டு வரும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அவற்றை இன்முகத்தோடு பெற்றுக் கொள்ளுங்கள். அதற்காக நன்றி செலுத்துங்கள்.
21. வீட்டை சுத்தமாக வைப்பதிலும் ஒழுங்காக வைப்பதிலும் பேணுதலாக இருங்கள். சிலவேளை கணவன் அதனை உங்களிடம் எதிர்பார்க்காத போதும் கூட.
22. எப்போதும் திருப்திப்படுபவளாக இருங்கள். வீண் விரயங்களை விட்டும் தவிர்ந்திடுங்கள். மேலதிக செலவுகளை ஏற்படுத்தாதீர்கள்.
23. குடும்ப ஒன்று கூடல்களை பொருத்தமான நேரத்தில் ஏற்பாடு செய்யுங்கள்.
24. கணவன் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வீட்டுக்கு வரும் போது அவரிடம் முறைப்பாடுகளை வேதனைகளை முன்வைக்காதீர்கள்.
25. குழந்தைகள் கணவனை வரவேற்கும் வகையில் தயார்படுத்தி வையுங்கள்.
26. குழந்தைகளைப் பற்றி கணவன் வீடு திரும்பியவுடன் அல்லது தூங்கியெழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிடும்போது முறையிடாதீர்கள்.
27. கணவன் குழந்தைகளுடன் உரையாடும் போது அல்லது ஏதாவதொரு விடயத்திற்காக அவர்களை தண்டிக்கும் போது நீங்கள் தலையிடவேண்டாம்.
28. குழந்தைகளுக்கும் தந்தைக்குமிடையில் சிறந்த தொடர்பை பேணிக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.
29. நீங்கள் எவ்வளவு தான் வேலைப்பளுவுடன் இருந்தாலும் குழந்தைகளை பராமரிப்பதில் பொடுபோக்காக இருப்பதில்லை என்பதை உணரச் செய்யுங்கள்.
30. குழந்தைகளுக்கு ஓய்வு கிடைக்கும் போது அவர்களது திறமைகளை வளர்ப்பதிலும் அவர்களுக்கு பிரயோசனமான விடயங்களை கற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.
31. உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு சிறந்த தோழிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது ஒவ்வொரு பருவத்திலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானியுங்கள்.
32. சிறு குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு தேவையான விடயங்களை செய்யுங்கள்.
33. குழந்தைகள் மீதும் கணவன் மீதும் உள்ள உங்கள் கடமைகளுக்கிடையில் நடுநிலைமையைப் பேணுங்கள்.
34. கணவனின் பெற்றோருக்கு கண்ணியம் செலுத்துங்கள். அவரையும் அவரது பெற்றோரையும் பிரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள். அவரது பெற்றோர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வழங்குங்கள்.
35. கணவனின் குடும்பத்தினரை அன்புடனும் கண்ணியத்துடனும் நடத்துங்கள். அவர்களுக்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பரிசுப் பொருட்களை வழங்குங்கள்.
36. கணவனின் விருந்தினர்களை கவனிப்பதில் அக்கறை செலுத்துங்கள். திடீரென்று அவர்கள் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுங்கள்.
37. கணவனின் உபகரணங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
38. எப்போதும் எந்தவொரு விருந்தாளியையும் அழைத்து வரும் நிலையில் வீட்டை வைத்துக் கொள்ளுங்கள்.
39. கணவன் தாமதமாக வரும் போது அவரை கண்டித்துக் கொள்ளாதீர்கள். மாற்றமாக அவரை எதிர்பார்த்திருந்ததை உணரச் செய்யுங்கள்.
40. வீட்டு ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை ஒரு மனைவி கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் மட்டுமே. ஆனால் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. எப்போதும் நாம் அல்லாஹ்வின் திருப்தியின் பால் தேவையுடையவர்களாக இருக்கின்றோம். அதனை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.
பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.
ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.
புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் தேவதையை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்
பார்ப்பதற்கு தேவதை போன்று அழகாக இருக்கிறாள் என்கிறார்களே, அது போன்ற திருத்தமான அழகு பெண்ணுக்கு இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.
காஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, தேவதை போன்ற அழகு என்கிறார்கள். அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.
எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், குலப்பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்
கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.
அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.
மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.
- இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.
நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.
சரி... நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும் அவரே ஐடியா தருகிறார்.
தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல், தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள் என்பது இதன் அர்த்தம்.
இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால் தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும் என்கிறார்கள்.
ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன. ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்" என்கிறார் கண்ணதாசன்.
[முன்குறிப்பு: இது கதையோ கற்பனையோ அல்ல. அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களால் அறிவிக்கப்பட்டு புகாரி, முஸ்லிம், நஸாஈ, திர்மிதீ ஆகிய நபிமொழி திரட்டில் பதிவு செய்யப்பட்ட உண்மையான சம்பவம்.]
பொதுவாக மனைவிமார்கள் தங்கள் கணவரைப்பற்றி அடுத்தவர்களிடம் நிறை, குறைகளைச் சொல்லி ஆறுதல் படுத்திக்கொள்வது எல்லா நாடுகளிலுமுள்ள வழக்கம்தான். மனைவியிடம் நல்லவன் என்று நற்சான்றிதழ் கிடைப்பது லேசுபட்ட காரியமல்ல! ஆனால் தான் திருமணம் முடித்துக்கொண்ட அத்தனை மனைவிமார்களிடமும் மிகவும் சிறந்தவர் எனும் நற்சான்றிதழ் பெற்றவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகத்தான் இருக்க முடியும்.
ஒரு ருசிகரமான சம்பவத்தை இங்கு வாசகர்களுக்காக தருகிறோம். காரணம், இந்த சம்பவத்தில் சில கணவர்களின் சிறந்த அடையாளங்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ரசித்துக்கேட்டு தன்னையும் ஒப்பிட்டுள்ளார்கள்.
ஆம், இதில் வரும் ஒரு கணவரை தனக்கு ஒப்பிட்டு அவரைப்போல் நானும் உனக்கு சிறந்த கணவன் என்று தனது அன்பு மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பெருமையாக எடுத்துக்கூறியும் உள்ளார்கள். அதை அண்ணாரின் இல்லறத் துணைவியான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அப்படியே ஏற்று ஆமோதித்துள்ளார்கள்.
இதோ அந்த ருசிகர சம்பவம்... படித்து பரவசம் அடைவதோடு விட்டுவிடாமல் நீங்களும் சிறந்த கணவர் ஆக முயற்சி செய்யலாம் தானே!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு முன் வாழ்ந்த எமன் நாட்டைச்சேர்ந்த பதினோரு (11) பெண்கள் தங்களின் கணவன்மார்கள் வெளியூர் சென்றிருக்கும்போது பொழுதுபோக்கிற்காக ஓரிடத்தில் ஒன்று கூடினார்கள். ஒவ்வொருவரும் தத்தமது கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடிமறிக்காமல் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்ல வேண்டும் என உறுதிமொழியும், தீர்மானமும், வாக்குறுதியும் எடுத்துக்கொண்டு பேசத்துவங்கினார்கள்.
★ முதலாவது பெண் கூறினாள் : என் கணவர் (உயரமான) மலை உச்சியில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப் போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு ஒப்பானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாக இருந்தாலும், அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால் (அந்த மலைப்பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அதுவொன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை.
விளக்கம் : அவளின் கணவன் ஓர் உபயோகமற்றவன். அவனைக்கொண்டு எவருக்கும் எத்தகைய நன்மையும் கிடையாது. அவன் மலையின் உச்சிபோல அகம்பாவியாகவும், அதன் கரடுமுரடான பாதையைப்போல் கெட்ட குணம் கொண்டவனாவான். ஆகையால் அவனிடம் உறவு கொள்வது எளிதல்ல. அவனுடன் சேர்ந்து இன்பமாக வாழ முடியாது. அவனைவிட்டு பிரிந்திருக்கவும் முடியாது.
★ இரண்டாவது பெண் கூறினாள் : நான் என் கணவர் பற்றிய செய்தியை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப்பற்றிய செய்திகளை ஒன்றுவிடாமல் சொல்லமுடியுமா என்ற பயமும் எனக்கு இருக்கிறது. அவ்வாறு கூறுவதானாலும் அவரது வெளிப்படையான மற்றும் குற்றங்குறைகளைத் தான் கூறவேண்டியதிருக்கும்.
விளக்கம் : அவனிடம் ஒருசில குற்றங்கள் இருந்தால் அதை இங்கு எடுத்துச் சொல்லி விடலாம். ஆனால், அவனிடம் உச்சி முதல் உள்ளங்கால் வரை குற்றங்களும், குறைகளும் நிரம்பியிருக்கின்றன. அவ்வாறு இருக்கையில் அவனுடைய குறைகளில் எதைச்சொல்வது எதை விடுவது? எல்லாமே குற்றம்தான்.
★ மூன்றாவது பெண் கூறினாள் : என் கணவர் மிகவும் உயரமான மனிதர். அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரது காதுக்கு எட்டி)னால் நான் விவாகரத்து செய்யப்பட்டு விடுவேன். (அதே நேரத்தில் எதுவும் பேசாமல்) நான் மவுனமாக இருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன்.
விளக்கம் : அவன் அதிக உயரமாக வளர்ந்திருந்ததால் அறிவு குறைவாக இருந்திருக்கிறது. ஆகையால் அவனிடம் ஏதாவது பேச ஆரம்பித்தால் தவறாக நினைத்து மனைவியை விவாகரத்து செய்து விடுவான். பேசாமல் இருந்து விட்டால் அவன், அவளின் தேவைகளைப்பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவான். அப்பொழுது அவள் இரண்டுங்கெட்டான் நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டு விடும். மனைவியுடன் நல்லபடியாக வாழவும் மாட்டான். விவாகரத்தும் செய்ய மாட்டான். ★ நான்காவது பெண் கூறினாள் : என் கணவர் (மக்கா உள்ளிட்ட) "திஹாமா" பகுதியின் இரவு நேரத்தைப் போன்ற(இதமான)வர். (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை, கடுங்குளிரும் இல்லை. (அவரைப் பற்றி) எனக்கு அச்சமும் இல்லை. (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதும் இல்லை.
விளக்கம் : மக்காவுக்கும் அதன் சுற்றுப் புறங்களுக்கும் "திஹாமா" என்றொரு பெயரும் உண்டு. அப்பிரதேசதேசத்தில் பலற் காலத்தில் கடுமையான வெயில் அடித்தாலும், இரவு நேரங்களில் அங்கு சீதோஷ்ன நிலை நடுத்தரமாகவே இருக்கும். இந்த நான்காவது பெண்ணின் கணவர் எப்போதும் நடுத்தரமாகவே எல்லா காரியங்களிலும் இருப்பார். எனவே அவரிடம் குடும்பம் நடத்துவதில் அவளுக்கு பயமும் இல்லை. அலுப்பும் தோன்றுவதில்லை.
★ ஐந்தாவது பெண் கூறுகிறாள் : என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தைப் போல் நுழைவார். வெளியே போனால், சிங்கம் போல் இருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்க மாட்டார்.
விளக்கம் : இந்தப் பெண்மணியின் வார்த்தைகளைக் கவனிக்கும்போது இவள், தனது கணவனை புகழ்ந்திருப்பதாகவும் கொள்ளலாம், இகழ்ந்திருப்பதாகவும் கருதலாம். எனினும் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது புகழ்ந்திருப்பதாகவே தெரிகிறது.
அவள் கணவனை இகழ்ந்திருப்பதாகக் கொண்டால்; வீட்டிற்குள் வந்தவுடன் அவன் வீட்டைக் கவனிக்காது சீறி விழுவதையும், அடிக்க விரட்டி வருவதையும் பார்த்தால் சிறுத்தையின் குணம் படைத்தவனாகத் தோன்றுவான். அவன் வெளியில் சென்றுவிட்டாலோ சிங்கத்தைப்போல கம்பீரமாக நடந்து கொள்வான். வீட்டில் என்ன நிகழ்ந்தாலும் அதைப்பற்றி கொஞ்சமும் கவனம் செலுத்த மாட்டான் என்று பொருள் கொள்ள வேண்டும். அதற்கு மாறாக அவள் கணவனைப் புகழ்ந்திருக்கிறாள் என்று எடுத்துக்கொண்டால்; அவன் வீட்டிற்குள் வந்தால் அங்கு என்ன நடந்திருக்கிறது? என்ன நடக்கவில்லை? என விசாரணை செய்து எவருக்கும் துன்பம் இடைஞ்சல் கொடுப்பதில்லை. தூங்கிக்கொண்டிருக்கும் சிறுத்தைப் போல் இருப்பான். வெளியில் சென்றால் சிங்கம் கர்ஜிப்பது போல் பேசிக் காரியம் சாதிக்கும் திறமைசாலி என்று பொருள் கொள்ள வேண்டும்.
★ ஆறாவது பெண் கூறினாள் : என் கணவர் உணவு உண்ண ஆரம்பித்தால் மிச்சம் மீதி ஏதும் வைக்காமல் அனைத்தையும் வாரி வழித்து உண்டு விடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமல் குடித்து விடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய் படுத்துக் கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக்கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை.
விளக்கம் :இந்தப் பெண்ணின் கூற்றில் கணவனைப் பற்றிப் புகழ், இகழ் இரண்டுக்கும் இடம்பாடு இருக்கிறது. எனினும் ஐந்தாவது பெண் வெளிப்படையில் புகழ்ந்திருப்பதைப் போல் இவள் வார்த்தையில் வெளித்தோற்றம் இகழாகவே தெரிகிறது.
இவளின் வாத்தையை புகழாக எடுத்துக்கொண்டால்; என் கணவன் கஞ்சனல்ல ஊதாரித்தனமும் உண்டு. பருகும் சுபாவமுடையவர். அவருடைய உணவிற்காகப் பற்பல உணவு வகைகள் வைக்கப்பட்டிருக்கும் ரொட்டி, பலகாரங்கள், பழங்கள், இன்னும் இதுபோன்ற பலவகை உணவு பதார்த்தங்கள் அனைத்தும் இருக்கும். அவைகளையெல்லாம் அவர் நன்கு சாப்பிட்டுவிட்டு, பருகும் முறை வரும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் பால், ஷர்பத் போன்ற பருகும் பனங்கள் அனைத்தையும் நன்கு திருப்தியாகப் பருகுவார். எவர் விஷயத்திலும் வீணாகத் தலையிட மாட்டார். பிறருடைய குற்றங்களைத் தேடிதிரிவது, அவர்களைத் தூற்றித் திரிவது போன்ற தீய குணங்கள் அவரிடம் இல்லை.
இனி அவளின் வார்த்தை கணவனை இழிவுப் படுத்துவதாக இருந்தால்; என் கணவர் பிறரைப்பற்றிய கவலை, அக்கரை இல்லாதவர். எது கிடைத்தாலும் அதை உண்டு குடித்து கொழுத்துப் போன சுயநலக்காரர். குடும்பத்தின்மீது அக்கரை இல்லாதவர்.
வீட்டுக்குள் அழகிய மனைவி இருக்கும்போது போர்வையை எடுத்துப்போர்த்திக் கொண்டு தூங்குவான். விடியும் வரை மனைவியைப் பற்றி சிறிதும் கண்டுகொள்ளவே மாட்டான். கட்டிய மனைவி இருக்காளே என்று கொஞ்சமும் கவலையே படமாட்டான். மனைவிக்கும் ஆசை, அபிலாசைகள் இருக்குமே என்று கொஞ்சம்கூட நினைத்துப்பார்க்க மாட்டான். பெண்மையை விளங்காத ஒரு சோம்பேரியான சுயநலக்காரன் இவன்.
★ ஏழாவது பெண் கூறினாள் : என் கணவர் விவரமில்லாதவர் அல்லது ஆண்மையில்லாதவர். சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் உன்னை ஏசுவார். கேலி செய்தால்) உன் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) உன் உடலைக் காயப்படுத்துவார் அல்லது இரண்டையுமே செய்வார்.
விளக்கம் : இவர் ஆண்மை இல்லாத கோழையான மனிதர். அப்பாவியான மனிதர். சூதுவாது தெரியாதவர்தான் என்றாலும் கோபம் வந்துவிட்டால் யாரென்றுகூட பார்க்காமல் முரட்டுத்தன்மாக அவர்களைத்தாக்கி காயப்படுத்தக்கூடியவர். இவரிடம் பல நோய்கள் (குறைகள்) குடிகொண்டிருப்பதால் மனைவிக்கு இல்லற சுகம் கொடுக்க முடியாதவனாக, கட்டிய மனைவியுடன் ஒட்டி உறவாடி பெயருக்காக கணவனாக இருக்கிறார்.
★ எட்டாவது பெண் கூறினாள் : என் கணவர் தொடுவதற்கு முயலைப் போன்ற(மிருதுவான மேனி உடைய)வர். மரிக்கொழுந்து போல் மணக்கக்கூடியவர்.
விளக்கம் : அவன் எளிய குணம் கொண்டவன். அழகிய நற்குணங்கள் அவனிடம் இருந்தது. அவனின் செயலெல்லாம் அமைதியாக இருந்தது. அவனின் உறவில் இருப்பவர்களுக்கு இன்சுவை இருக்கும். அவனின் நற்குணம் வாசனை திரவியங்கள் போல மணமிக்கதாக அழகாக, கவர்ச்சியாக இருந்தது.
★ஒன்பதாவது பெண் கூறினாள் : என் கணவர் (அவரைத் தேடி வருவோரை கவர்ந்து இழுக்கும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்கு உணவு சமைத்துப்போட்டு வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிறைய சேகரித்து வைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்துக் கொண்டவர்.
விளக்கம் : அவளுடைய இந்த வார்த்தையில் அவள் கணவனின் பல சிறப்புக்கள் அடங்கியிருக்கின்றன. உயர்ந்த மாளிகை வீடு என்பதிலிருந்து அவர் பெரிய பணக்காரர் எனத் தெரிகிறது. அவரை மக்கள் எப்பொழுதும் தேடிக்கொண்டிருப்பார்கள் அதனால் அவர்களுக்கு உணவு சமைத்து சமைத்து அவர் வீட்டில் சாம்பல் ஏராளமாகக் குவிந்துவிடும். உயர்ந்த தோற்றம் ஆடவர்களுக்கு எழிலாகும். அவன் கூரிய அறிவு கொண்டவனாக இருப்பதால் அவனிடம் ஆலோசனைக்கேட்க அடிக்கடி மக்கள் அவனைத் தேடி வந்து கொண்டிருந்தார்கள். மக்கள் அவர் வீட்டிற்கு அதிகமாக வருவதால் அவர் வீடு ஆலோசனை மண்டபம் போலிருக்கும் என்பது கருத்தாகும்.
★ பத்தாவது பெண் கூறினாள் : என் கணவர் செலந்தர். எவ்வளவு பெரிய செல்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும் விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே (தயார் நிலையில்) இருக்கும். (விருந்தினர் வருகையை முன்னிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால் தாம் அழிந்தோம் என அவை உறுதி செய்து கொள்ளும்.
விளக்கம் : ஒட்டகங்கள் மேயச் சென்றுவிட்டால் விருந்தாளிகள் வரும்போது அவைகளை மேய்ச்சல் காட்டிலிருந்து ஓட்டிவரத் தாமதப்படும் எனக் கருதி அவைகலை காட்டிற்கு ஓட்டிச்செல்ல விடுவதில்லை. அந்த அளவுக்கு அவரிடம் விருந்தாளிகள் வந்து கொண்டிருந்தனர்.
★ பதினொன்றாவது பெண் கூறினாள் : என் கணவர் பெயர் "அபூ ஸர்உ" எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் மெல்லிய கைகளை கொழுக்க வைத்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது "ஷிக்" என்னுமிடத்தில்) சிறிய ஆடுகளுடன் (திரிந்து கொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர் என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும், ஒட்டகங்களும் உள்ள தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரது பண்ணை) வீட்டில் என்னை வாழச்செய்தார். நான் அவரிடம் எதையும் பேசுவேன். நான் அலட்சியப்படுத்தப் பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குவேன்.. (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை) நான் (சாப்பிட்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுவேன்.) பருகுவேன்..
(என் கணவரின் தாயார் அதாவது எனது மாமியார்) உம்மு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரது வீட்டுக்களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும். அவரது வீடு விசாலமானதாகவே இருக்கும்.
(என் கணவரின் மகன்) இப்னு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரது படுக்கை, உருவப்பட்ட கோரை போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப்போன்று சிறியதாக) இருக்கும். (அந்த அளவிற்கு கச்சிதமான உடலமைப்புக் கொண்டவர்.) ஓர் ஆட்டுக்குட்டியின் சப்பை இறைச்சி அவரது பசியை தணித்து விடும். (அந்த அளவிற்கு குறைவாக உண்ணுவார்).
(என் கணவரின் மகள்) பிந் அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? தம் தாய், தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல் கொண்ட) அவளது ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக்கண்டு பொறாமைக் கொள்வாள்.
(என் கணவர்) அபூ ஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவள் தெரியுமா? அவள் எங்கள் (ரகசிய) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை வீட்டிலுள்ள உணவுப்பொருட்களை சேதப்படுத்துவதும் இல்லை. வீட்டில் குப்பைக்கூளங்கள் சேர விடுவதும் இல்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்).
ஒருநாள் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (அதிகாலை) நேரம் (என் கணவர்) அபூ ஸர்உ வெளியே சென்றார். (வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்த குழந்தைகள் அவளது இடைக்குக் கீழே இரு மாதுளங் கனிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஆகவே (அவளது கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை விவாக விலக்கு செய்துவிட்டு அவளை திருமணம் செய்து கொண்டார். அவருக்குப் பின் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாக்கப்பட்டேன். அவர் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறி (பஹ்ரைன் நாட்டிலுள்ள) "கத்" எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டி ஒன்றை எடுத்துக் கொண்டார். மாலையில் வீடு திரும்பியபோது ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டுவந்தார். மேலும் கால்நடைகளில் ஒரு ஜோடியை என்னிடம் வழங்கி உம்மு ஸர்உவே! நன்றாக நீயும் சாப்பிடு. உன் தாய் வீட்டாருக்கும் சாப்பிடக்கொடு" என்று சொன்னார்.
(ஆனாலும்) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய எல்லாப் பொருள்களையும் நான் ஒன்றாகக்குவித்தாலும் (என் முதல் கணவரான) அபூ ஸர்உவின் சின்னச் சிறு பாத்திரத்தைக்கூட அவை நிரப்ப முடியாது. (என்று சொல்லி முடித்தாள்).
விளக்கம் : கணவனால் கைவிடப்பட்டு வேறொரு கணவனுக்கு வாக்கப்பட்டு சிறப்பாக அந்த கணவன் இவளை நடத்தியும், முதல் கணவனை மறக்க முடியாமல் அவனின் தாராளம், செல்வப்பெருக்கு, அவனின் கவனிப்பு உயர்வானது என்பதை பெருமையாக எடுத்துக் கூறி அபீ ஸர்உவை மறக்காமல் பாராட்டிக்க்கூறுகிறாள். அபீ ஸர்உ தான் இவளுக்கு மிகவும் பிடித்த கணவன் என்பதை மிக தெளிவாக சொல்லி மகிழ்கிறாள்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்; ''அல்லாஹ்வின் தூதர் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (என்னிடம்) (ஆயிஷாவே!) உம்மு ஸர்உவிற்கு, அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாக) இருப்பேன்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸாஈ, திர்மிதீ)
இந்த வரலாறு ஹதீஸ் கலை நிபுணர்களிடத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இந்த பதினோரு பெண்களின் வரலாறு அடங்கிய இந்த அறிவிப்பு பற்றி பல தனி நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சில நூல்களில் இந்த பதினோரு பெண்களின் எல்லா பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பில் இலக்கியச் சுவை நிறைந்து காணப்படுகிறது. அரபுமொழி இலக்கியம் தெரிந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த இலக்கியத் தெவிட்டாத விருந்தாகும். இந்த ஹதீஸ் தொடரில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் மட்டும் ஷமாயில் திர்மிதீயில் இருந்து எடுத்து இடையில் அமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
ஒரு ஆண் குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.★
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது 'ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.
''ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!' என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.
''ஹிஜாப்' என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.
இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.
ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம் ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.
அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.
''ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்' என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.
பெண்களுக்கு பாதுகாப்பு இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் கூட இதை அறியலாம்.
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.
ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.
பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். 'இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்' என்றெல்லாம் கூறுகின்றனர்.
ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.
பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?
பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?
பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?
பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?
எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.
இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.
பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.
ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.
இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது